பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் கல்லூரி வாழ்க்கை 3.71 என்று அப்பிரிவுகள் தொகுத்துக் கூறப்பெறுகின்றன. என் இல்லறவாழ்வில் கல்வியின் பொருட்டு ஏற்பட்டது ஒதல் பிரிவு ஒன்றேயாகும். இஃது மூன்றாண்டுகள் நடைபெற்றது. இளங்கலைப் பட்டப படிப்புக் (பி. எஸ்.சி.) காலத்தில் இரண்டாண்டும், ஏல். டி. பட்டப்படிப்பின்போது நேரிட்ட ஓராண்டுப் பிரிவும் ஒதற்பிரிவில் அடங்கும். ஆனால் விடு முறை நாட்களில் பிரிவு விரதம் இல்லை. மற்றும் பட்டப் பிடிப்பு முடிந்த பிறகு நடைபெற்ற உத்தியோகவேட்டை” யின்போது ஓராண்டு பிரிவு இல்லை. அதன் பிறகு ஆசிரியப் பயிற்சி (எல்.டி) பெறும்போது ஓராண்டு பிரிவு ஏற்பட்டது. இந்த இரண்டு பட்டங்கள்தாம் பிரிவை மேற்கொண்டு பெற்றவை. ஏனைவித்துவான், பி.ஏ., எம். ஏ., பிஎச். டி. பட்டங்கள் பிரிவின்றியே பெற்றவை என்பது குறிப்பிடத் தக்சது. பட்டங்கள் பெறுவதில் உண்மையான ஞானம் பெற வேண்டும் என்ற அவா இருந்தால், இல்வாழ்க்கை இதற்குத் தடையாக இருக்காது என்பதற்கு நானே ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றேன். பொட்டணத்தில் ஆறுதிங்கள் இல்லற வாழ்க்கை (இன்ப வாழ்க்கை) காற்றினும் கடுக ஒடிவிட்டது. ஜூன் திங்களில் (1937) கல்லூரியில் சேர்வதாகக் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் போட்டேன். கல்லூாரி திறக்கும் இரண்டு நாள்முன்ன தாக ரூ.150 = எடுத்துக்கொண்டு (இதை என்மைத்துனரே கொடுத்தார்) திருச்சி புறப்பட்டேன். கல்லூரியில் சேர்வதற்கு முதல்வரிடம் இசைவு பெற்றேன். முதற் பகுதிக் காலத்திற் குரிய கட்டணங்களைச் செலுத்தினேன். சென்ற ஆண்டில் தங்கியிருந்த வாணப்பட்டறைத் தெருவிலுள்ள அறையை உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு மாதத்திற்குரிய வாடகையை (ரூ6| =) முன்பணமாகச் செலுத்தினேன். முதல் ஆண்டு திரு. ஜி, எம் விருத்தாசலம், (பொம்பலூர் வட்டம், கருடமங் கலத்தைச்சேர்ந்தவர்) என் அறைத் தோழராக அமைந்தார்,