பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 நினைவுக் குமிழிகள் -1 இலால்குடி உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபொழுதே (மே 1936) இவர், வகுப்புத் தோழர் பி.பி. சே.தியாசராசன்,இலால்குடி வட்டம் பெருவள நல்லூரைச் சேர்ந்தவர்), இவர்கட்கு இரண்டு வகுப்புகள் கிழே படித்துக் கொண்டிருந்த என். வி. முத்துக்கிருட்டிணன் (பெரம்பலூர் வட்டம், நாரணமங்கலத்தைச் சார்ந்தவர்) ஆகிய மூவரும் எனக்கு அறிமுகமானவர்கள். அக்காலத்தில் இலால்குடியில் மிகஉயர்ந்த நிலையில் பள்ளி உணவுவிடுதியை மிகக் குறைந்த செலவில் நடத்திவந்த திரு. வி. பாலசுப்பிர மணியப் பிள்ளை (உயர்நிலைப்பள்ளி இடை நிலை ஆசிரியர்) இவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் மூவரும் துடுக்காகவும், சுறுசுறுப்பாகவும் படிப்பில் ஆர்வம் மிக்கவர்களாகவும் இருந்தமையாலும் இத்தைய இயல்புகளையுடைய என்னை இவர்கணித்தறித்திருந் தமை யால் இவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார் எனக் கருதுகின்றேன். நான், விருத்தாலம், முத்துக் கிருட்டிணன் ஆகிய மூவரும் நடுத்தர நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தியாகராசன் மேட்டுக்குடி வகுப்பைச் சேர்ந்தவர். எங்கள் மூவரையும் சிறுவயதிலே கவனித்த பழம் பெரும் புலவர் ஒருவர் எங்கள் இயல்புகளைப் பதிய வைத்துள்ளார். பூவுலகில் மானிடராய்த் தோன்ற அரி தென்னும் புகழுரையை யாம்மதியோம் புண்ணியனார் பாதம் மேவு திரு மெய்யறிவும் நற்செயலும் கொண்டு விழுமியநல் குணங்களொடு திகழுமவர் அன்றே தாவு திரை சூழ் உலகில் மாந்தரெனச் சாற்றும் தகவுமிக வுடையர்வெறும் சனித்தல்பொருள் ஒன்றோ பாவுறு எம் தோழரவர் பல்கலைக் குரிசில் பைந்தமிழின் சுவையனையார் வந்தணைந்தோர் எவர்க்கும்