பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் கல்லூரி வாழ்க்கை 373 நகைமுகமும் இன்சொல்லும் இயல்பினிலே வாய்ந்த நண்பரவர் சுப்பு எனும் நாமம் உறு செம்மல் மிகையொன்றும் கூறுகிலேன் விளம்புவதொன்றுண்டு விளையுமொரு பயிர்முளையில் தெரியும்எனற் கேற்ப தகைசான்ற மூவரவர் தலைநாளில் ஓர் நாள் தமியேன்கண் டுரையாடும் சார்புவரப் பெற்றோன் வகையான கல்விபயில் மாணவராம் நிலையில் வந்த அவர் இவரெனவே வகுத்துரைப்பக் கேண் மின்: பழமலையின் திருப்பெயரான் வழக்கறிஞன் வல்லான் பண்புமிகு மருத்துவனாம் அன்புமுத்து கிருஷ்ணன் அழகுதமிழ் மொழியினொடு ஆங்கிலமும் தேர்ந்த ஆசிரியப் பெருந்தகையாம் சுப்புஎனும் அண்ணல் விழலாக்கா தொருநொடியும் பெறற்கரிய தென்று வினையாற்றும் திறனதனால் மேனிலையில் நின்று பழகுதமிழ் அணையராய்ப் பெயர்பெறுவர் என்று பண்டேயென் பேதை மனம் கண்டதின்று மெய்யே இவ்வாறு பதிவுசெய்த புலவர் வேளாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; வைணவ மணி எனப் போற்றத்தக்க திருமால் பக்தர். எண்பது அகவையைத் தாண்டிய இவர் இன்னும் வாழ்ந்து வருகின்றார்; இவர் ஆசி எனக்கு இன்றும் உண்டு. நான் ஏதோ புத்தகங்களைக் கட்டிக்கொண்டு இன்னும் அழுகின்றேன். கலைமகள் அருள் இன்னும் இருந்து வருகின்றது. விருத்தாசலம் இன்று திருச்சிமாநகரில் புகழ்பெற்ற வழக்குரைஞராகத் திகழ்கின்றார், இவர் திருச்சி கண்டிராத அளவுக்குப் பெரும் புகழுடன் திகழ் 2. என் மணிவிழா மலர் - பக், 25 (பெ, இராமாநுச ரெட்டியார்)