பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 நினைவுக் குமிழிகள்-1 கின்றார்; திருமகளின் அருள் மழையாகப் பொழிகின்றது. முத்துக்கிருட்டிணன் சிறந்த மருத்துவராகத் திகழ்ந்து வரு கின்றார், ஏழை எளியவர்களிடம் குறைந்த தொகையைப் பெற்றுத் தொண்டாற்று வதனால் இவருக்கு ஜனதா டாக்டர்’ என்ற பெயர் வழங்கி வருகின்றது. இவர் மேலும் திருமகள் அருள் பாய்ந்தவண்ணம் உள்ளது. நான் தங்கியிருந்த வீட்டு மேல்மாடியில் நான்கு அறைகள் இருந்தன, அவற்றுள் இரண்டு மிகச் சிறியவை; இரண்டு சற்றுப் பெரியவை. பெரிய அறைகட்கு ரூ5/-ம் சிறியவற்றிற்கு ரூ 11-ம் வாடகையாக இருந்தது. நானும் விருத்தாசலமும் ஒர் அறையில் தங்கியிருந்தோம். ஒர் ஆண்டு முடிய. அடுத்த ஆண்டு அவர் புனித சூசையப்பர் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பெற்ற உணவு விடுதியில் சேர்ந்து கொண்டார், சிறிய அறைகள் ஒன்றில் தம்பையா என்ற ஒரு கல்லூரிமாணவரும் மற்றொன்றில் காவலர் (HeadConstable) ஒருவரும் இருந்தனர், மற்றொரு பெரிய அறையில் சுப்பண்ணன் என்ற கணித மாணவரும் மற்றொரு வரும் தங்கியிருத்தனர். நான் தங்கியிருந்த வீடு ஒரு பிள்ளைமாருக்குச் சொந்த மானது, வீட்டுக்குரியவரும் அவரது இல்லத்தரசியும் அறுபது அகவையை எட்டும் நிலையிலிருந்தவர்கள். மிகவும் அன்பாகப் பேசி எங்களை மகிழ்விப்பவர்கள், எங்கள்மீது தந்தை, தாய்ப்பாசத்தைக் காட்டுபவர்கள். நான் தங்கி யிருந்த அறை தெருவை நோக்கியிருந்தது. அங்கிருந்து சாளரத்தின் வழியாக உச்சிப்பிள்ளையார் கோயிலையும் தாயுமானசுவாமியின் ஆலயத்தையும் காணலாம். இந்த அறைக்கு ஒருரூபாய் அதிகமாகவாடகை கேட்டார். காரணம்: இதிலிருந்து படித்துத் தேர்வு எழுதியவர்கள் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரியிலும் முதன்மையாக இருந்தவர்