பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் கல்லூரி வாழ்க்கை 375 கள் என்றும், பிள்ளையாரும் சுவாமியும் இவ்வறையிலிருப் பவர்கள் மீது அருள் பொழிவார்கள் என்றும் கூறுவார் அவர் சொன்ன காரணத்தின் உண்மையை அறிவு கொண்டு ஆராய்தல் இயலாது. பெரியவர், நல்லவர், ஒரு ரூபாய் அதிகம் கேட்பதத்கு இவ்வாறு காரணம் கூறுகின்றார் என்று மனமுவந்து ஒரு ரூபாய் அதிகமாகவே தந்து இந்த அறையை அமர்த்திக் கொண்டேன். இந்த விடுதியில் இருந்தவர்கள் ஆறுபேர். அக்காலத்தில் தெப்பக்குளத்தருகில் சைவர் உணவு விடுதியொன்றிருந்தது. முதலியார் விடுதி” என்ற மற்றோரு விடுதியும் இருந்தது இரண்டிலும் மாதச்சாப்பாட்டிற்கு ரூ7|-வாங்கினர். அந்தக் காலத்தில் அளவுச் சாப்பாடு என்பது இல்லை, பலர் இதில் உணவு கொண்டனர். எங்கள் அனைவருக்கும் சுவை ஒத்து வராததால், நாங்கள் மாயவரம் உணவுவிடுதியில்" * எடுப்புசாப்பாடு ஏற்பாடு செய்து கொண்டோம், பதினெட்டு ரூபாய் எடுப்பில் மூவர் சாப்பிடலாம். அக்காலத்திம் இந்த விடுதியிலும், சின்னகடைவீதியிலுள்ள வேங்கட உணவுவிடுதி யிலும் பிராமணர்கள் மட்டிலும் தான் உள்ளே சென்று உணவு கொள்ளலாம்; பிராமணரல்லாதாருக்கு எடுப்பு சாப்பாடு, வசதியிருந்தது. உணவுக் கடைவைத்துப் பிழைக்கும் பிராமணர்களும் இந்த வைதிக முறையை' அனுசரித்துவந்தது இப்போது வியப்பினைத் தருகின்றது, தந்தை பெரியார் ஈ. வெ. ரா, அவர்களின் பிரசார பீரங்கியும் இந்த வைதிக முறையைத் தொடக்கத்தில் தகர்க்க முடியாதிருந்தது, பிராமண ரல்லாத சில சமூகத் தினரிடம் இந்தப் 'பிராமணத்துவம் நிலைபெற்றிருந் 3 மாயவரம் - மாயூரம், இப்போது மயிலாடுதுறை, என்று பெயர் மாறறப்பட்டுள்ளது. அதாவது, பண்டிருந்துவந்த சரியானபெயர் மீண்டும் புழக்கத் திற்கு:வந்துள்ளது.