பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 நினைவுக் குமிழிகள்-1 தமையே இதற்குக் காரணமாகும், இதனால் பெரியார் இரு முனைச் சமூகப்போர் தொடுக்க வேண்டிய நிலையிலிருந்தார். நாளடைவில் பெரியாரின் பீரங்கியால் இந்த முறை தவிடு பொடியாகிவிட்டது. தேசிய கவி பாரதியாரும் இந்த வைதிக முறையைத் தகர்த்தெறியக் கவிதை வெடிகளை வீசினார். பார்ப்பானை ஐயர் என்றகாலமும் போச்சே என்ற அடி எத்தனையோ மேடைகளில் முழங்கப்பட்டது. இது தேச விடுதலையை நோக்கி வீசப்பெற்ற வெடி குண்டு. நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்த நாட்டினில் இல்லை, குணம் நல்லதாயின் எந்தக் குலத்தின ரேனும்-உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்" சூத்திர னுக்கொரு நீதி-தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடு மாயின்-அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்" வையகம் காப்பவ ரேனும் - சிறு வாழைப் பழக் கடை வைப்பவ ரேனும் பொய்யக லத்தொழில் செய்தே - பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்" இவை சமூக நோய் அகன்றிட பாரதியார் தந்த ஆயுர்வேதக் குளிகைகள், இவை, மெதுவாக மனம் மாற்றம் செய்பவை. அழுகுபுண்கள் இவற்றால் ஆறுமோ என ஐயப்படத்தக்கவை. 4. பா.க : புதியபாடல்கள் உயிர் பெற்றதமிழர்பாட்டு. 5. - അു. - 13 3. ఫిషి 14