பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் கல்லூரி வாழ்க்கை 377 ஆனால் தந்தை பெரியாரும் அவருடைய சீடர்களும் தரும் மருந்து அழுகு புண்ணில் காரத்துணி வைத்துக்கட்டுவது போன்றவை. ஆனால் இந்த மருத்துவத்தின் பலன் காண கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு ஆயிற்று, உணவு முறையைப்பற்றிப் பேசிய மனம் உள்ளுக்குள் பொங்கி எழுந்த தால் பேனாவை எங்கோ இழுத்துச் சென்றுவிட்டது. இன்றும் அந்த மயிலாடுதுறை உணவு விடுதி உள்ளது; இப்போது உணவு கொள்வதில் சாதி வேற்றுமை காட்டுவதில்லை. இன்று வேங்கட உணவுவிடுதி இல்லாதொழிந்தது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர்கள். தம்பதிகள் - இருவரும் சற்றுப் பருத்த உடலையுடையவர் கள்; குள்ளமாக இருந்தமையால் இந்தப் பருமன் அதிகமாகத் தெரிந்தது. இதனால் விடுதியில் தங்கியிருந்த சுப்பண்ணன் இவர்கட்குக் குண்டுத்தம்பதியர்' என்று திருநாமம் சூட்டி னார் ஆகவே, நாங்கள் ஆண் உரிமையாளரை மிஸ்டர்குண்டு (Mr Fat) என்றும், பெண் உரிமையாளரை மிஸஸ் குண்டு (Mrs-Fat) என்றும் செல்லமாகச் சுட்டுவோம். எப்படியோ எங்கட்கு உதவியாளாக இருப்பதற்கு எங்கிருந்தோவந்தான் ஒர் இளைஞன். அவனைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. பரம்பரை ஆண்டியோ பஞ்சத்தில் ஆண்டியோ என்பது தெரியவில்லை. இவன் நிலையைப் பார்த்து சுப்பண்ணன் பிட்சு என்று திருநாமம் குட்டினார் , எங்கள் சிறிய உலகத்தில் இரண்டாண்டுக் காலம் அவன் இதே பெயரால் வழங்கப்பெற்றான். பாரதியார் சித்திரிக்கும் கண்ணன் - என் சேவகனைப் போன்றே பணியற்றினான். வெட்டி வா என்று ஏவினால் ‘கட்டி வருவான்'. தவறாக ஏதாவது அவன் செய்துவிட்டால் எங்களில் யாரும் அவனைக் கடிவதில்லை. அறிவுரை கூறித் திருத்துவோம். நகைச் சுவையாக ஆ வ ைன ப் ப ற் றி