பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 நினைவுக் குமிழிகள்-1 ஏதேனும் கிண்டலாகச் சொன்னால் அவ னும் எங்களுடன் சேர்ந்து சிரிப்பான்; முகச்சுழிப்பின்றி சிரிப்பு விருந்தில் கலந்து கொள்வான். விருந்துப் பண்டமாக இருப்பவன் அவன்தானே! அவன் முதன்முதலில் வேலைக்காக எங்களை நாடியபோது என்ன சம்பளம் வேண்டும்?' என்றோம். அவனோ சேவகக் கண்ணன் போலவே, "ஐயன்மீர்! தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை நானோர் தனியாள்;............ “.............. ............ ; தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள’ காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை’ என்று பேசினான். 'ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு ஆறு ரூபாய் தருகின்றோம்.நீ காலையும் மாலையும் இரண்டு செட்டில் எடுப்பு சாப்பாடு மாயூரம் விடுதியிலிருந்து எடுத்து வரவேண்டும். இதில் மிஞ்சும் சாப்பாடு உனக்குப் போதும். கடைக்குப்போதல் போன்ற ஏதாவது எடுபிடி வேலையும் செய்ய வேண்டும். அவ்வப்போது ஏதாவது சில்லறையும்’ உனக்குக்கிடைக்கும். மாலையில் அரிக்கேன் விளக்குகளைத் துடைத்து எண்ணெய் போட்டு வைக்க வேண்டும். சில சமயம் எங்கள் பனியன், அண்டர்வேர் இவற்றைத் துவைத்துப் போடவும் வேண்டும். சட்டை, வேட்டிகளை அவ்வப்போது லாண்டரியில்போட்டு வாங்கி வந்துதர வேண்டும். இவைதாம் உன் வேலை. எங்களுடன் தாழ்வாரத்தில் தங்கிக்கொள்ள லாம் பகல் ஒரு மணிக்கு சிற்றுண்டி விடுதியில் சிற்றுண்டி வாங்கி வைக்க வேண்டும். திரு. ரெட்டியாருக்கு மட்டிலும் (எனக்கு) நண் பகலிலும் இரவிலும் பால்வாங்கி வைக்க 7. கண்ணன்.என் சேவகன்-அடி 34-38