பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் கல்லூரி வாழ்க்கை 379 வேண்டும்” என்றோம். அவனும் சரி என்று ஒப்புக் கொண்டு எங்களுடன் தங்கி விட்டான். எங்களுள் ஒருவனாகவே ஆகிவிட்டான். நாளாக நாளாக எங்களிடத்தில் பிட்சுவுக்குப் பற்று மிக வளர்ந்து வந்ததைக் காண முடிந்தது. அவனால் எங்கட்கு ஏற்பட்ட நன்மைகளைச் சொல்லி முடியாது. வாய் முனுப்ப தில்லை. அறைகளை நன்கு பெருக்கித் துய்மையாக்கி விடுவான், போடும் துணிகளைத் துய்மையாக்கிக் காய தைத்து மடித்து வைப்பான். நாங்களும் அவனை எங்களில் ஒருவனாகவே கருதி, பழைய வேட்டி, பழைய சட்டை தருவோம். தீபாவளி, பொங்கலுக்கு புதிய சட்டை, புதிய வேட்டி வாங்கித் தருவோம். அந்தக் காலத்தில் ஆறு ரூபாய்க்கு மூன்று செட் துணிகள்” வாங்கலாம். விடுமுறைக்குப் பிறகு தி ரு ம் பி வ ந் து சேரும்போது விடுமுறைக்கு (2 மாதம்) உள்ள சம்பளத்தையும் தருவோம். அதனைப் பெற்று மிகமிக மகிழ்வான். பணப் புழக்கம் அதிகம் இல்லாத காலம். இட்டிலி காலணா; தோசை முக்காலணா; அரை கப் காஃபி முக்காலணா." இக்கால 12 காசுக்கு அக்காலத்தில் வயிறு நிறைய சிற்றுண்டி கொள்ள லாம். நாங்கள் சொன்ன பணிகளை மிகத் திறமையாக நிறைவேற்றி வந்தான். நான் மட்டிலும் அவனுக்கு.21- ரு தனியாகக் கொடுத்த தாக நினைவு. இரண்டு இட்டிலி, ஒரு தோசை. ஒரு வடை பகல் ஒரு மணிக்கு தயாராக வாங்கி வைத்திருப்பான். நான் அறையில் பிரஸ்ஸர் ஸ்டவ் ஒன்று வாங்கி வைத்திருந்தேன். ஆழாக்குப் பாலைச் சிறிது நீர் விட்டுக் காய்ச்சி ஒவல்டின் 8. காலனா 3 காசு (1; புதுக்காசு); முக்காலணா - 9 காசு (4; புதுக்காசு). அக்காலத்தில் ரூபாய்க்கு 192 காசு. -