பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 நினைவுக் குமிழிகள்-1 பானம் தயாரித்துக் கொள்வேன். சிற்றுண்டி அருந்தியதும் இதனை உட்கொள்வேன். இரவிலும் ஆழாக்குப் பாலைக் காய்ச்சிப் பருகுவேன். பால் பாத்திரங்களைத் துப்புரவு செய்தல் போன்ற வேலைகளைச் செய்து வந்ததால், ரு 2தனியாகக் கொடுத்து வந்தேன். நான் பொட்டணம் போகும்போதும், கோட்டாத்துார் போகும்போதும் நான் விரும்பும் பாசிப்பருப்பு இலட்டு, காராச்சேவு அல்லது முருக்கு கொண்டு வருவேன். மாலையில் 5 மணிக்குக் கல்லூரியி லிருந்து திரும்பியதும் இவற்றில் சிறிது உண்டு களைப்பைப் போக்கிக் கொள்வேன். அதிகமாக வெளியில் போவதில்லை. அப்படிப் போனால் காவிரிப்பாக்கம் (4 ஃபர்லாங் தொலைவு) சென்று உலாவுவேன்; அல்லது காவிரிக் கரையின் அருகி லுள்ள நீராகார மடத்துச் சாமியாரிடம் பேசிக் கொண் டிருப்பேன். இவ்வாறு இரண்டாண்டு அறை வாழ்வு இனிமையாகச் சென்றது. இரவு எட்டு மணிக்கு உணவு கொண்டதும் மாடியில் வெட்ட வெளியில் உட்கார்ந்து கொண்டு இந்த அறுவரும் அளவளாவுவோம். ೫5 பெரும் பாலும் பேராசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதைப் பற்றிய திறனாய்வாகத்தான் இருக்கும். தம்பையா என்பவர் ஒர் அநுபவத்தை அவிழ்த்து விட்டார். அவர் இன்று கல்லூரி மாணவர்கட்கு N. C C. இருப்பதுபோல் அன்று U.T.C. என்ற படைப்பயிற்சி இருந்து வந்தது. முதலிரண்டு ஆண்டு அவர் திருச்சி மேட்டுச் சிந்தா மணியில் அறையொன்றில் தங்கியிருந்து படித்து வந்தார். புதன் ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களில் கல்லூரி மைதானத்தில் படை அணிவகுப்பு (Parade) நடைபெறும். துப்பாக்கி இயக்குதல் போன்ற விளக்கமும் தெளிவாக்கப் பெறும். அதற்கு அவர் அதிகாலையில் 5.45க்கு U. T. C ஆடையணிந்து மேட்டுச் சிந்தாமணியிலிருந்து மிதி வண்டி யில் வருவது வழக்கம். இப்போது சாலை அமைப்பு முதலிய