பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டு ம் கல்லூரி வாழ்க்கை 381 வற்றில் மாற்றம் செய்திருப்பது போன்ற நிலை அக் காலத்தில் இல்லை. கரூர் நெடுஞ்சாலையில் திருச்சி நகரை விட்டுத் தனியாக ஒரு ஃபர் லாங் தொலைவில் அஃது ஒரு தீவுபோல் அமைந்திருந்தது. பல அந்தணக்குடும் பங்களும் சிறு தொழிலாளர் குடும்பங்களும் உழவர் பெருமக்களும் அங்குக் குடியிருந்தனர். அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் முதலிய சடங்குகட்குப் பலர் அங்கு வருவார்கள். காவிரியில் நீராடுவதற்கு நல்ல துறையமைப்பு படிக்கட்கு களுடன் அமைந்திருந்தது. இந்தப் புறநகர்ப் பகுதியில் நாட்டுப்புறக்களை தட்டும் அமைதியான வாழ்வுக்குச் சிறந்த இடம். மேட்டுச் சிந்தாமணி. கரூர் நெடுஞ்சாலையில் ஏராளமான இரட்டை மாட்டு வண்டிகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு மயிலஞ் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். கழுத்துப் புண்ணுடன் கூடிய எருதுகள் கட்டப் பெற்றிருக்கும் வண்டி களில் வரும் வண்டியோட்டிகள் வண்டிகளிலிருந்து இறங்கி வணக்கம் செலுத்தி ரூ. 21- ரூ. 5'- என்று தம்பய்யாவிடம் தந்து தங்கள் வண்டிகளை நிறுத்தாது அனுப்புமாறு வேண்டுவார்களாம். முதலில் தம்பையாவுக்கு ஒன்றும் புரிய வில்லையாம். பிறகு தன்னைத் தான் அணிந்துள்ள ஆடையைக் கண்டு மயங்கி S.P.C.A.யைச் சார்ந்த ஆள் என்று தவறாகக் கருதி இப்படிப் பணம் வழங்க முயன்றன்த் எங்களிடம் சொல்விச் சொல்லி மகிழ்வார். இப்படிக் கள்ளங் கபடம் அற்ற வண்டியோட்டிகளும் அக்காலத்தில் இருந்து வந்தனர். இந்நாளில் அத்தகைய வண்டிகட்கு வேலையே இல்லை. அவை செய்த பணியை இப்போது சரக்குந்து (Lorry)-பாரப் பொதி வண்டிகள் செய்து வருகின்றன. இப்படித் தம்பையாவும், தலைமைக் காவலரும் (Headconstable) தம் பல்வேறு அநுபவங்களை அவிழ்த்து விட்டு எங்களை மகிழ்விப்பார்கள்.