பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-48 47. இயற்பியல் புகழ்ப்பட்டப் (ஆனர்ஸ்) படிப்பு 1936, இளங்கலைப் பட்டம் படிப்பு (பி.எஸ். சி) வகுப்பில் சேர்வதற்கு முன் இயற்பியல் புகழ்ப்பட்டப்படிப்பு வகுப்பில் (பி.எஸ் சி ஆனர்ஸ்) சேர்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தேன். அக்காலத்தில் புனித சூசையப்பர் கல்லூரியில் கணிதம், பொருளாதாரம், இயற்பியல் இந்த மூன்று பாடங்களில் மட்டிலும் தான் புகழ்ப்பட்டப் படிப்புக்கு (Honours Course) வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. என் விஷயத்தில் பரிந்துரைப்பதற்குப் பிறந்த நாள் தொட்டு இன்றுவரை எவரும் இலர். பெரியாரைத் துணைக் கோடல்’ என் விஷயத்தில் பொருளற்றதாகி விட்டது. அப்படிப் பரிந்துரைக்கும் பெரியார் வேண்டு மானால் நான்தான் அவரையும் பார்த்து முயல வேண்டும்; பலன் அளிக்க வேண்டியவர்களையும் நான்தான் பார்க்க வேண்டும். பரிந்துரைப்பவர்களைப் பார்ப்பதைவிடப் பலன் அளிப்பவர்களைப் பார்ப்பதே சிறந்தது எனப்பட்டது என் மனத்தில், பூசாரியைப் பார்க்க முயல்வதை விட சுவாமியையே பார்ப்பது மேல் என்பதுதான் ஒருவிதத்தில் என் வாழ்வில் அமைந்து விட்டது. புகழ்ப்பட்டப் படிப்பிற்கு நானே அடிக்கடி மறைத் திரு. ஜெரோம் டி. செளலா (முதல்வர்) அவர்களை அடிக்கடிப் பார்த்துக் கெஞ்சினேன்! ஒரு மாணவன் பல முறை வந்து தம்மைப்பார்த்து இப்படித் தொந்தரவு பண்ணுகின்றானே' என்று அவர் மனம் கோணுவதில்லை; சினம் கொள்வ தில்லை. எப்பொழுதும் புன்முறுவலுடன்தான் காணப்படுவ வார். இம்மாதிரி தொந்தரவு கொடுப்பது முதல்வர் அறையில் அல்ல; சாமியார்கள் விடுதி (Fathers lodge) இல் தான் அடிக்