பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பதற்கு பணஉதவி 383 கடிப்பார்ப்பதுண்டு, 'நீ வந்தது தாமதப்பட்டது. இடங்கள் நிரம்பிவிட்டன. முயல்வதைக்கை விடுக” என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார். ஓராண்டுப் படிப்புத்தடைப்பட்டு அடுத்த ஆண்டு வந்து படிப்பைத் தொடங்கும்போது இயற்பியல் புகழ்ப் பட்டப் படிப்பிற்குத் தொடக்கத்திலேயே முயன்றேன். விடுமுறைக்காலத்திலேயே மு. த ல் வ ரு க் கு க் கடிதம் எழுதினேன். குழந்தைப் பேறு இல்லாத ஓர் இளம் பெண் அரசமரத்தைச் சுற்றி வழிபாடு செய்வதைப் போல் விடாமல் பாதிரியார் விடுதிக்குப் போவதும் வருவதுமாக இருந்தேன். பத்து நாட்கள் இவ்வாறு செய்தேன். ஒவ்வொரு நாளும், காலையில் 8.30மணிக்கு முதல்வரின் அறைக்குப் (விடுதியில் உள்ள அறை) போவேன். மிகச் சுறு சுறுப்பாக ஏதாவது செய்து கொண்டிருப்பார். அடிக்கடி பார்ப்பதால் எங்களிடம் பேச்சு இராது; மெளனமே பேச்சு. போனவுடன் வணக்கம் செலுத்திவிட்டுத் தரையில் உட்கார்ந்து விடுவேன்; அவர் இருக்கையில் அமரச்சொல்வார். நா ன் மறு த் து விட்டுத் தரையில்தான் உட்கார்வேன். கல்லூரியில் நின்று கொண்டு சுருக்கமாக விஷயத்தை முடிப் பதைவிட விடுதியில் தரையில் உட்கார்ந்து சாதிப்பது மேல் எனப்பட்டது என் மனத் தில். ஆகவே, இந்தச் சண்டித் தனத்தை மேற்கொண்டால் பலன் கிட்டும் என்று கருதினேன். மறைத்திரு. ஜெரோம் சாமியார் பால் நினைந்துாட்டும் தாயினும் சாலச் சிறந்தவர். ஒவ்வொரு மாணாக்கரின் தகுதி, தி ற ைம, உழைக்கும் திறன், நல்லொழுக்கம் முதலியவற்றையெல்லாம் நன்கு கணிக்கும் திறம் படைத் தவர். நாள்தோறும் நானும் பேசாமல் வாளா அமர்ந் திருப்பேன். அவரும் தம் காரியத்தை விடாது பார்த்துக் கொண்டிருப்பார், 9-45 ஆனதும், "மிஸ்டர் சுப்பு,