பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 நினைவுக் குமிழிகள்-1 அறையைப்பூட்டிவிட்டுச் சாவியை அலுவலகத்தில் என் தலைமை எழுத்தரிடம் சேர்ப்பாய்' என்று கூறிவிட்டுக் கல்லூரியை நோ க் கி ப் புறப்பட்டுவிடுவார். நானும் அவ்வாறே அறையைப் பூட்டிச் சாவியை அலுவலகத்தில் சேர்ப்பிப்பேன், இப்படிச் சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் என் நிலையை விளக்கினார். இப்போதுள்ள விதிப்படி இடைநிலை வகுப்பு முடித்தவுடன் நான்கு ஆண்டு களுக்குள் புகழ்ப்பட்டப்படிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாண்டுப்படிப்பு; ஏதோ அசெளகர்யம் ஏற்பட்டால் ஒராண்டு தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இப்போது ஒராண்டு உன் உடல் நலக்குறைவால் கழிந்தது. இந்தச் சலுகை இனி உனக்கில்லை, மீண்டும் ஏதாவது அசெளகர்யம் ஏற்பட்டால், இந்தச் சலுகையைப் பயன் படுத்த முடியாதாகையால், உன் நிலை அதோகதியாய்விடும் உன் நன்மையைக் கருதித்தான் இந்தப் புகழ்ப்பட்டப் படிப்பை உனக்கு நான் அளிக்க வில்லை ஆனால் இந்த விதியை மாற்றுவதற்கு முயன்று வருகின்றேன். இடைநிலைவகுப்பை முடித்த நான்காண்டுக்குள்’ என்பதை 'புகழ்ப் பட்டப்படிப் பைத் தொடங்கி நான்காண்டுக்குள்’ என்ற திருத்த முயன்று வருகின்றேன்' என்றார். இப்போது என் நிலை எனக்குப் புரிந்தது. உடனே. அவரிடம் 'மிக்க நன்றி ஃபாதர் என் முயற்சியைக் கைவிட்டு விடுகிறேன்” என்று சொல்லி அவருக்குத் தொந்தரவு கொடுப்பதை நிறுத்திக்கொண்டேன். அவர் சொன்னார் இயற்பியல் புகழ்ப் படிப்பைவிட வேதியியல் பட்டப் படிப்பு சிறந்தது. இது பல இடங்களில் இல்லை. இது படித்தவர்கட்கு நல்ல எதிர் காலம் உண்டு” என்று. அந்தக்காலத்தில் மேனாட்டிலிருந்து வந்த சாமியார்கள் விருப்பு வெறுப்பின்றிப் பணியாற்றினார்கள். சாதி, சமய