பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்வுக் கண்ணோட்டம் 385 வேறுபாட்டிற்கு இடம் கொடாமல் திறமைக்கு முதலிடம் தந்தார்கள். சொந்தத் தந்தையைவிட மாணாக்கர்களிடம் பரிவும் பாசமும் காட்டி அவர்தம் முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். இன்றைய நிலையில் நம் நாட்டுச் சாமியார்கள் கல்வி நிலையங்களில் முக்கிய பொறுப் பில் அமர்ந்திருக்கின்றனர். இப்போது நாடார் கிறித்தவர்' தேவர் கிறித்தவர்' 'வேளாளர் கிறித்தவர்', 'பிராமணக் கிறித்தவர்” என்றெல்லாம் பாகுபாடு காட்டுகின்றனர் என்பதாகக் கேள்வி. சில ஆண்டுகட்கு முன்னர் சென்னை புரசைவாக்சத்திலுள்ள கிறித்தவ வேதாகம குருகுலத்தில் தந்தை பெரியார் ஈ. வெ. ரா. கொள்கைகள்' என்பது பற்றி நடை பெற்ற கருந்த ரங் கொன்றில் பெங்களூரி விருந்து வந்து கிறித்தவ அறிஞர் ஒருவர் இதனை அம்பலப் படுத்தினார். 'நமக்கு ஒரு விடிவெள்ளி தோன்ற வேண்டு மானால் தந்தை பெரியார் கிறித்தவராகப் பிறந்து ஒரு நூற்றாண்டு பணியாற்றினாலும் நாம் மாறுவோமா என்பது ஒரு கேள்விக்குறி' என்று உணர்ச்சியுடன் பேசிமுடித்தார். குமிழி-48 48. தேர்வுக் கண்ணோட்டம் சின்று முதல் இன்றுவரை கல்லூரியில் பாடம் பயிற்றும் ஆசிரியர்கள் தேர்வுக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே கற்பித்துவருகின்றனர். இன்று நாட்டில் பெரும் பாலும் மிக்க செல்வாக்குப் பெற்றிருப்பது அஞ்சல் வழிக் கல்வியாகும். இதில் பாடங்கள் தயாரித்து மாணாக்கர்கட்கு அனுப்பும் முறைகளைக் கவனித்தால், இம் முறைக்கல்வி தேர்வை முக்கிய நோக்கமாகக் கொண்டே இயங்குகின்றது என்பது தெளிவாகும். எந்தவிதமாகச் சிறந்த முறையில் —25–