பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 நினைவுக் குமிழிகள்-1 பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பெற்றாலும் பாடத் திட்டங் களின் நோக்கங்கள் மலையேறிப் போகின்றன; தேர்வு நோக்கங்களே நடைமுறையாகி விடுகின்றன. பயிற்சிக் கல்லூரியில் பத்தாண்டுகள் பணியாற்றிக் கற்பிக்கும் முறை பற்றிய நூல்கள், கல்வி பற்றிய கொள்கைகளை விளக்கும் நூல்கள், பாடத் திட்டங்களை உருவாக் கும் முறைகள் நுவலும் நூல்கள், தேர்வு முறைகளைத் தெளிவிக்கும் நூல்கள், வேறு பல்வகை நூல்கள் இவற்றை ஆழ்ந்து கற்கும் வாய்ப்பு பெற்றபிறகு கல்வியியல் பற்றிய தத்துவங்கள் தெளிவாயின. ரூசோ, வால்ட்டயர், பெஸ்டலாஸ்ஸி, மாண்டிசாரி ஃபிராபெல், ஜான்ட்யூவி போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் கண்ட முறைகளை விளக்கும் நூல்களையும் ஆழ்ந்து கற்றதால் இவை மேலும் தெளிவினை நல்கியது . கல்லூரி வாழ்வில் நான் மேற்கொண்ட முறைகளை விளக்க முயல்கின்றேன். கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் நூலகத்தைச் சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் . மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச் சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும் இனிதினிதாய் எழுந்த உயர் எண்ண மெல்லாம் இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை: புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில் புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்." என்று நூலகத்தைப்பற்றிப் பாரதிதாசன் கூறியிருப்பது ஈண்டு நினைவிற்கு வருகின்றது. புனிதசூசையப்பர் கல்லூரி 5. பாரதிதாசன் கவிதைகள் - புத்தக சாலை