பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்வுக் கண்ணோட்டம் 387 யில் நான் படித்த காலத்தில் நூலகம் மிக அருமையாக அமைந் திருந்தது. இன்றைய நிலையில் அது மிக விரிந்து வளர்ச்சி பெற்றிருக்கும் எனக் கருதுகின்றேன். கல்லூரியில் சேரும் போதே கட்டணம் வாங்கிக் கொண்டு ஒவ்வொரு மாணாக் கனுக்கும் புத்தகப்பட்டி (Books Catalogue) தந்துவிடுவார் கள். இல்லத்திலிருந்து கொண்டே இதைப் புரட்டிப்பார்த்து தேவையான நூல்களைக் குறித்துக் கொள்ளலாம். மாணாக்கர்கட்குப் பயன் படும் பொருட்டு முன்னைய ஆண்டுகளில் நடைபெற்ற பல்கலைத் தேர்வுகளின் வினாத் தாள்களை கட்டமைத்து நூல்வடிவில் வைக்கப்பெற்றிருக் கும். கல்லூரியில் சேர்ந்ததும் முதல் வாரத்திலேயே இந்த வினாத்தாள் தொகுதிகளைப் பெற்றுக் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நடைபெற்ற தேர்வுகளின் வினாத் தாள்களில் ஓர் ஐந்தாண்டுக்குரிய தாள்களை ஒரு நல்ல கட்டமைத்த குறிப்பேட்டில் பாடம், ஆண்டு (மார்ச்சு, செப்டம்பர்), தாள்வரிசை (1, 2, 3,...)யில் எழுதிவைத்துக் கொள்வேன். ஆங்கிலத்தில் பாட நூல்கள் ஆண்டிற்கு ஐம்பது விழுக்காடு மாறிக் கொண்டிருக்கும், இவற்றில் நடை முறையிலுள்ள நூல்களில் வரும் வினாக்களை மட்டிலும் குறித்துவைத்துக் கொள்வேன். வேதியியல் முக்கிய பாடம்ாதலால் (Main) அவற்றில் பத்தாண்டுகளில் கேட்கப் பெற்ற பொதுக் கட்டுரைகளைப்பற்றிய குறிப்புகளை மட்டிலும் தனித்தனியாகக் குறித்துவைத்துக் கொள்வேன். பாடங்கள் கற்பிக்கப்பெறும்போது இவற்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தால் இவை தேர்வுபற்றிய முறையை விளக்குவனவாக அமையும், புனித சூசையப்பர் கல்லூரியில் நூலகப்பணியாளர்கள் மிகத் திறமையாகப் பணியாற்றி வந்தனர், நூல்களைப் பெறுவதற்கு நூலகத் தாள்நறுக்கு (Library Slip) களைப் பத்துப் பத்தாகக் கட்டமைத்து வைத்திருப்பார்கள், ஒரு