பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 நினைவுக் குமிழிகள்-1 சட்டின்விலை ஓர் அணா (ஆறுகாசு).அதில் நூல் எண், நூலின் பெயர், நூல் பெற்ற நாள், திருப்பிக்கொடுக்க வேண்டிய நாள் குறிப்பிடப்பெற்றிருக்கும், தேவையான நூல்களில் ஆறின் பெயர்களை எழுதித்தருதல் வேண்டும், ஒரே ஒரு சமயம் மூன்று நூல்களைப் பெறலாம். குறிப்பிட்ட நாளில் நூல் களைத் திருப்பித்தராவிடில் ஒருவாரத்திற்கு ஒரு நூலுக்கு ஓரணாவீதம் தண்டம் (Fine) கட்டவேண்டும், முக்கியமாக ஒருவர் வேண்டும் நூல் யாராவது பெற்றுப் போயிருந்தால் அதைக் குறித்துவைத்துக் கொண்டு அடுத்த முறை முன்னுரிமையாக அது வழங்கப் பெறும், இந்த நூலகத்தை அ க் க ா ல த் தி ல் நான் மிக நன்றாகப் பயன்படுத்திக் கொள்வேன், அறிவியல் பட்டப்படிப்பில் தமிழ்ப்பாடம் இல்லையானாலும் சிலசமயம் மறைமலையடிகள் திரு.வி.க. பண்டிதமணி, நாவலர் வேங்கடசாமி நாட்டார், கரந்தை வேங்கடாசலம் பிள்ளை , ரா, பி, சேது பிள்ளை இவர்கள் எழுதிய ஒரு சில நூல்களைப் பெற்றுப் படிக்கும் பழக்கத்தை மேற் கொண்டிருந்தேன். இதனால் என்னிடம், அ..ங்கிக் கிடந்த (Dormant) “தமிழ்க் காதல்' பிற்காலத்தில் பெருகி வளர்வதற்குக் காரணமாயிற்று. பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது குறித்து வைக்கப்பெற்றுள்ள தேர்வுத்தாள்களைப் புரட்டும் போது நடைபெற்ற பாடங்களில் கேட்கப் பெற்றுள்ள வினாக்கள் தெரியவரும். கணிதப்பாடத்தில் வரும் வினாக் கட்கு உடனுக்குடன் தனிக்குறிப்பேட்டில் விடையிறுத்து விடுவேன். இயற்பியல், வேதியியல் இவற்றில் கேட்கப் பெற்றுள்ள கணக்குப்பகுதிகட்கு விடையிறுத்து அப்பகுதியில் சேர்ந்த கோப்புகளில் சேர்த்து வைத்துக் கொள்வேன் . இப்பணியில் சிறிதும் சோம்பவின்றி மிகச் சுறுசுறுப்பாகச் செயற்படுவேன். பாடங்கள் நடைபெறும்போதே அப்பகுதியில்