பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேர்வுக் கண்ணோட்டம் 389 பல்கலைக்கழகத்தேர்வில் கேட்கப்பெற்றுள்ள வினாக்களைப் பேராசிரியப் பெருமக்கள் சுட்டிக்காட்டுவார்கள், வேதியியல் பாடங்களில் கேட்கப் பெற்றுள்ள பொதுக்கட்டுரைகட்கு பல நூல்களின் துணைகொண்டு தனித்தாள்களில் (Foolscap) பதினைந்து பக்கங்கள் அளவில் கட்டுரைகளைத் தயாரித்து வைத்துக்கொள்வேன், பொது வேதியியல் (Genera| chemistry), அங்கக வேதியியல் (Organic chemistry) அநங்கக வேதியியல் (Inorganic Chemistry) இவற்றில் இரண்டாண்டுப் படிப்பு முடியும் நிலையில் ஒவ்வொன்றிலும் பத்துக் கட்டுரைகட்குக் குறையாமல் என்னிடம் இருந்தன. சில கட்டுரைகள் எம்.எஸ்சி. தரத்திலும் இருந்தன . இவற்றை அடிக்கடிப் பார்த்து அவற்றின் பொருள்களை மனத்தில் நிரந்தரமாக அமைத்துக் கொள்வேன். இரண்டாம் ஆண்டின் இறுதியில் எழுதிவைத்திருந்த வினாக்கள் அனைத்திற்குமே விடைகாணப் பெற்றிருக்கும் , என் அறைக்கருகிலுள்ள அறையில் சுப்பண்ணன் என்ற மாணாக்கர் இருந்தார், அவர் பி.ஏ. வகுப்பில் முற்றிலும் கணிதப்பாடமாகவே எடுத்துப்படித்தவர், கணிதத்தில் வரும் ஐயங்களை அவர் தீர்த்து வைப்பார். அவராலும் தீர்க்க முடியாத ஐயங்களை வகுப்பில் எழுப்புவேன்; பேராசிரியர் சீ நிவாசன் மிக அருமையாக விளக்கி எல்லோருமே பயனடையச் செய்வார், ஐயமாக இருக்கும் கணக்குகளை கரும்பலகையில் மிக அழகாகச் செய்து காட்டுவார். இயல்பாகவே கணிதத்தில் பேரார்வங் கொண்டிருந்த எனக்கும் கணிதப்பாடத்தில் நல்ல தெளிவு ஏற்பட்டது.