பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 குமிழி -49 49. படைப் பயிற்சி பெறுவதில் ஆர்வம் இடைநிலை வகுப்பில் நான் சேர்ந்தபோது பல்கலைக் கழகப் பயிற்சிப் படையில் (University Training Corps U.T.C) சேரும் என்ணம் எழவில்லை , காரணம், அப்போது எனக்கு வழிகாட்டிபோல் காணப்பட்டவர் P, அரங்கசாமி, அவர் அதில் சேரவில்லை ; நானும் அதில் சேரவில்லை ; அதில் சேர்ந்தால் பல்வேறு நன்மைகளை அடையலாம். முதல் நன்மை நடையில் ஓர் ஒழுங்குமுறை ஏற்படும், சாலையில் ஆடி ஆடி நடக்கும் பழக்கம் மாறும்; ஆணைக்குக் கட்டுப்பட்டு நடத்தல், காலத்தில் எதையும் செய்தல், உண்டல் - உறங்கல் இவற்றைக் காலந் தவறாது .மேற்கொள்ளுதல் போன்றவை இரண்டாவது நன்மையாகும். வேலை தேடும் படலத்தில் இங்குப் பெறும் சான்றிதழ் ஓரளவுதுணை செய்யும் என்பது கற்பனையில் காணும் மூன்றாவது நன்மையாகும்; கற்பனை சிலருக்கு நடைமுறையாகவும் நிகழ்வதுண்டு. பட்டப்படிப்பு முதலாண்டு கல்லூரியில் சேர்ந்ததும் இந்த மாணவர் படையில் சேர்ந்து கொண்டேன். புதன், ஞாயிறு காலை ஆறுமணிக்குப் படையுடையுடன் வகுப்பிற்கு வருதல் வேண்டும். பல்வேறு பயிற்சி நடைகளில் பயிற்சிகள் தரப் பெறும். துப்பாக்கியைப் பிரித்து அதில் தோட்டாவைப்பது, துப்பாக்கியைத்துடைத்துத் தூய்மையாக வைத்துக் கொள்வது ஈட்டி,யை அதில்வைத்துப் பொருத்துவது, துப்பாக்கியைக் கொண்டு சுடுவது போன்றவற்றில் நல்ல பயிற்சிகள் அளிக்கப்பெறும். துப்பாக்கியைத் தோளில் சாத்திக் கொண்டு வரிசை நடை பயில்வது, ஒற்றை வரிசை நடை. இவற்றிற்கெல்லாம் 'நல்ல பயிற்சிகள் அளிக்கப் பெறும்.