பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பயிற்சி பெறுவதில் ஆர்வம் 391 -


-- ஓராண்டிற்குள் எல்லாவற்றிலும் என்னிடம் நல்ல திறன்கள் ஏற்பட்டன. துப்பாக்கியைக் கொண்டு இலக்கை நோக்கிச் சுடுவதில் ஒரு தேர்வு நடைபெற்று அதில் முதற்பரிசும் பெற்றேன். இந்த ஆண்டு (டிசம்பர்-1937) சென்னையை அடுத்தள்ள பல்லாவரத்தில் ஒரு பயிற்சி முகாம் (Training Camp) நடை பெற்றது; 20 நாட்கள் Military Barracks அருகில் நாங்கள் இருவர் வீதம் தங்குவதற்கு டேராக்கள் (Tents) அமைக்கப் பெற்றன. சற்றுத் தொலைவில் கழிப்பிடத்திற்கும் ஏற்பாடு செய்யப் பெற்றது. முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்ற இடம் நீர் சூழ்ந்த இடமாக இருந்தது. 20 நாட்களில் இரண்டு மூன்று நாட்கள் மழை பெய்ததாக நினைவு; மீதி நாட்கள் - பனி, குளிர் அதிகமாக இருந்தது இருபது நாட்களும் காலை 6 மணி முதல் 8 மணி வரை கடுமையான பயிற்சிகள்; போர் வீரன் உடையில் பல்வேறு பயிற்சிகள்; வாள் பொருத்தப் பெற்ற துப்பாக்கிகளைத் தாங்கிய வண்ணம் பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றன. இவை காலை தேநீருக்குப் பின் தரப்பெற்றன. 8.9 மணிவரை குளியல்; வசதிகள் குறைவான இடத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தன. 9-10 மணி வரை காலை சிற்றுண்டி, 10-12 மணி வகுப்புகள் நடை பெற்றன. திரு. சுந்தரேசனும் போர்த்துறையைச் சார்ந்த பலரும் வகுப்புகளை நடத்தினர், போர்த்துறைபற்றிய பல்வேறு செய்திகள் இந்த வகுப்புகளில் விளக்கப்பெற்றன. 12-2மணி பகலுணவுக்கும் ஓய்வுக்கும் என நேரம் ஒதுக்கப் பெற்றிருந்தது மீண்டும், 2-4 மணி வகுப்புகள் தொடர்ந்தன. 4-48 மணிக்கு சிறிய அளவில் சிற்றுண்டி; 5-6 மணி சில விளையாட்டுகளில் ஈடுபாடு. இரவு 8 மணிக்கு உணவு . சில நாட்கள் இரவில் 'போர் வீரர்கள்' களியாட்டங்களில் ஈடுபட்டதாக நினைவு. நாங்களெல்லாம் கற்பனைப் போர் வீரர்கள். போர்க்காலச் சூழ்நிலைகளை எல்லாம் நாங்கள்