பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 நினைவுக் குமிழிகள்-1 அநுபவித்தோம். அக்காலம் இத்தாலி-ஜெர்மனி போர் நடை பெற்ற சமயம், 1939-இல் இரண்டாம் உலகப் பெரும் போரும் தொடங்கியது. இந்த 20 நாட்களில் இரண்டு ஞாயிற்று கிழமைகள் வந்தன. அன்று முழு ஓய்வு. சென்னையைச் சுற்றிப் பார்க்கலாம். இந்த 20 நாட்கள் பயிற்சி எங்களை வாட்டி எடுத்து விட்டது. சில சமயம் கடுமையான பயிற்சி களால் சோர்வும் ஏற்பட்டது. இரவில் நன்கு உறக்கமும் ஒரு ஞாயிறன்று சென்னையைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். எஸ். அப்பாவு என்ற என் ஒரு சாலை மாணாக்கர் என்னுடன் வந்ததாக நினைவு. இவர் இடை நிலை வகுப்பில் தேசியக் கல்லூரியில் படித்து பி.எஸ்சி. - படிப்பிற்குப் புனித சூசைட்டர் கல்லூரிக்கு வந்தவர். இன்னொரு மாணாக்கர் எஸ் நாகரத்தினம் என்பவர், இவர் நான்கு ஆண்டுகளும் தேசியக் கல்லூரியில் பி.ஏ. வரையில் படித்தவர். பொருளியல் அவர் விருப்ப பாடம் என்பதாக என் நினைவு. இந்த இருவரும் முசிறியிலிருந்தபோதே என்னுடன் பயின்றவர்கள். இவர்கள் இருவரின் தந்தையாரும் 1914-18இல் நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போரில் பங்கு பெற்றவர்கள். ஆதலால் கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு சலுகைகள் இருந்தன. படிப்பதற்கு உதவித் தொகையும் பெற்று வந்ததாக நினைவு. நான் ஓராண்டு படிப்பை நிறுத்த வேண்டி நேரிட்டதால் இருவரும் ஓராண்டு என்னை முந்தி விட்டனர். இவர்கள் இருவரும் போர்ப் படைப் பயிற்சியில் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்றதால் இதிலேயே பல்வேறு உயர் நிலைகளை அடைந்தனர்; என்ன நிலைகளை அடைந்தனர் என்பது இப்போது நினைவில் இல் லை; அதனால் இந்தக் குமிழிகளில் அச்செய்திகள் வெளிப்படவில்லை,