பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 நினைவுக் குமிழிகள்-1 பல்கலைக்கழக ஆய்வுத்துறைகள் என்னை மிகவும் கவர்ந்தன அறிவியல் படிப்பை முடித்துக் கொண்டு அறிவியல் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் உந்தப் பெற்றேன். நான் தமிழ் படித்துத் தமிழில் ஆய்வினை மேற்கொள்வேன் என்று கனவிலும் கருதவில்லை . ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு, ஒன்று ஆகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நினைக்கும் எனை ஆளும் ஈசன் செயல். • என்ற ஒளவைப் பாட்டியின் திருவாக்கை இப்போது சிந்திக்கின்றேன், யான் தமிழில் புலமைபெற்று, ஆய்வினை மேற்கொண்டது, பல நூல்களைப் படைத்தது இவை யெல்லாம் 'எனை ஆளும் ஈசன் செயலால்' என்பதை நினைந்து நினைந்து மகிழ்கின்றேன், அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த என்னைத் தமிழில் அறிவியல் நூல் களைப் படைக்கும் வாய்ப்பை அளித்தது இறைவனின் திருவருளே என்றும் கருதுகின்றேன். இருபது நாட்கள் கழித்து முகாம் முடிந்தது. எல்லோரும் திருச்சி திரும்பினோம். முகாமின் இறுதி நாளன்று போர்த் துறையைச் சார்ந்த பெரிய அலுவலர் ஒருவர் விழாவில் கலந்து கொண்டு எங்கட்கெல்லாம் ஏதோ அறிவுரை வழங்கியதாக நினைவு. திருச்சியிலிருந்து அன்று மாலையே பொட்டணம் சென்றேன். மூன்று நாட்கள் விடுமுறைதான் எஞ்சியது. அந்த நாட்களைப் பொட்டணத்தில் கழித்து மீண்டும் திருச்சி வந்து க ல் லூ ரி ப் படிப்பைத் தொடரலானேன். 6. நல்வழி-37