பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி - 50 50. தமிழை முறையாகக் கற்கத் தொடங்கியது நான் இடைநிலை வகுப்பில் கல்லூரியில் பயின்ற காலத்தில் துறையூருக்கருகிலுள்ள சிக்கத்தம்பூரிலிருந்த வீ. சி. கிருஷ்ணசாமி, கோட்டாத்தூருக் கருகிலுள்ள நாகலாபுரம் என்ற ஊரிலிருந்து சி. முத்து நல்லப்ப ரெட்டி, உப்பிலியபுரத்தருகிலுள்ள மாறாடியிலிருந்து அ. சாம்பசிவம் என்பவர்கள் திருவையாற்றில் புகுமுக வகுப்பு, வித்துவான்- முதல் நிலை. வித்துவான் - இறுதி நிலை வகுப்புகளில் பயின்று வந்தனர். கோயம்புத்தூரிலிருந்து அரசு, நாராயணசாமி, கு - தாமோதரன் இவர்களும் திருவையாற்றில் படித்து வந்தனர். இவர்கள் யாவரும் தொடக்கநிலையில் சரியான கல்வி பெறமுடியாமல் பின்னர் தமிழின் மீது கொண்டிருந்த ஆர்வத்த 7 ல் தமிழ் படிக்க விழைந்து வித்துவான் போன்ற வகுப்பில் சேர்ந்து படித்தவர்கள். கோடை விடுமுறையில் கு. தாமோதரன், அரசு. நாராயண சாமி நாயுடு இவர்கள் இருவரைத் தவிர, ஏனைய மூவரையும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ கோட்டாத்தூரிலோ அல்லது வேறு எங்காவதோ சந்திக்கும் வாய்ப்புகள் நேரிடும். சிலசமயம் தஞ்சை மாவட்ட இளங்காடு என்ற ஊரைச் சார்ந்த பழநி முருகையா நாட்டாரும் வருவதுண்டு. இவர்தான் இலவச உணவு விடுதியில் இவர் கள் இடம் பெறத் துணையாக இருந்தவர். இவர்களிடம் மேற்கொள்ளும் உரையாடல்கள் நான் உயர் நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் ஜம்புலிங்கக் குருக்கள், குமாரவீர அய்யர் இவர்களும்; கல்லூரியில் இடைநிலை வகுப்பில் படித்த காலத்தில் பேராசிரியர் மு நடேச முதலியார் அவர்களும் ஊட்டிய தமிழுணர்வும் என்னுள்ளே உறங்கிய நிலையில் இருந்தது. அந்த உணர்வு நான் பொட்டணத்தில் இருந்த காலத்தில் தலை காட்டத் தொடங்கியது.