பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 நினைவுக் குமிழிகள்-1 அந்தக்காலத்தில் இரா. கிருட்டிணசாமி என்பவர்- இவர் நாமக்கல் தாலுகா வரகூரைச் சேர்ந்தவர் வித்துவான் பட்டம் பெற்று வேலையின்றி வீட்டில் இருந்தார். அவரிடம் நன்னூல் காண்டிகை, யாப்பருங்கலக்காரிகை கற்றுக் கொள்ள நினைத்துக் கடிதம் எழுதினேன், அவரும் ஒப்புக் கொண்டார். ஒருமாதம் பொட்டணத்தில் வந்து தங்கினார். காலையிலும் மாலையிலும் இயன்றபோதெல்லாம் இந்த இரு நூல்களைப் படித்தோம். பின்னர் நான் துறையூரிலிருந்தபோது வித்துவான் முதல் நிலைத்தேர்வுக்குப் படித்தபோது இக் காலத்தில் பெற்ற அடிப்படை அறிவு மிகவும் துணையாக இருந்தது. இவர் திருமண மாகாதவராதலால், நான் கடிதம் எழுதியவுடன் யாதொரு தடையுமின்றிப் பொட்டணத்தில் வந்து தங்கிப் பாடம் சொன்னதை இன்று (21-1-1988) நினைவு கூர்கின்றேன், பாடம் படித்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் மணியக்காரர் வீட்டுத் திண்ணையில்-'சோம் பேறி மடத் தில் ---அரட்டைக் கச்சேரியில் இவரும் எங்களுடன் கலந்து கொண்டு பொழுது போக்குவார். நான் அடுத்த ஆண்டு (1940-4}} சைதை ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது இவர் வடஆர்க்காடு குடியாத்தம் என்ற ஊரில் நகராண்மைக் கழக ஆட்சியின் கீழிருந்த உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்து விட்டார். அப்போது அப்பள்ளியின் தலைமை யாசிரியர் எம்.எஸ். நடேச அய்யர் என்பவர், இவர் நாமக்கல் வட்டம் முத்துக்காப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் இவருடைய உ த வி ய ா ல் த ா ன் குடியாத்தத்தில் இரா. கிருட்டிணசாமிக்கு உத்தியோகம் கிடைத்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். அந்தக் காலத்தில் வேலை வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. எவராவது உதவாவிடில் வேலையில் அமர்வதென்பது குதிரைக் கொம்பாக இருந்தது.