பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழை முறையாகக் கற்கத் தொடங்கியது 39) நான் சைதையில் பயின்ற காலத்தில் ஒருசமயம் சேலம் வழியாகப் பொட்டணம் வரும்போது குடியாத்தத்தில் இறங்கி இவரைச் சந்தித்தேன். திரு, நடேச அய்யரிடம் அறிமுகம் செய்துவைத்தார். சைதையில் படித்தபோதே படித்து முடித்த பின் என்ன செய்வது? எங்கு வேலை தேடுவது? எனக்குப்பரிந்துரைப்பவர்கள் ஒருவரும் இல்லையே என்ற கவலை மனத்தில் ஊடாடிக் கொண் டிருந்தமையால் குடியாத்தம் சென்றால் ஏதாவது வழிபிறக்குமா என்பதை ஆராய்வதற்காகவே குடியாத்தம் சென்று வந்தேன். திரு. நடேச அய்யர் இயற்வியலில் பட்டம் பெற்றவர். நான் வேதியியலில் பட்டம் பெற்றுப் பயிற்சியும் பெற்றுக் கொண் டிருந்தேன். அந்தக் காலத்தில் (இரண்டாம் உலகப் பெரும் போர் நடை பெற்றிருந்தகாலம் அது) வேலை கிடைப்ப தெல்லாம் போர்த்துறையில் தான் என்பதையும் நாட்டில். கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது என்பதையும் சொல்லியேயாக வேண்டும். வேலை வாய்ப்புகள் மிகக் குறை வாக இருந்தாலும், பள்ளிகளில் கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் கிடைப்பது அரிதாக இருந்தனமையால் என் பயிற்சி முடிந்ததும் தனக்கு எழுதும்படி அன்புடன் சொன்னார் நடேச அய்யர். ஆனால் குடியாத்தம் சென்று பணியாற்ற வாய்ப்பு இல்லாது போயிற்று. துறையூரிலேயே புதிதாகத் தொடங்கப் பெற்ற நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரிய ராகப் பணியேற்கும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி விட்டான். என்ன தன்று நின் செயலே என்றறிந்தால் யான்விரும்பி என்னவென்று வாய்திறப்பேன் ஈசன்னே-இன்னமின்னம்