பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 நினைவுக் குமிழிகள் -1 எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டுமுனக்(கு) அப்படியே செய்தருளு வாய்? என்ற குருஞான சம்பந்தரின் திருவாக்கை இப்போது நினைந்து மகிழ்கின்றேன். குமிழி-51 51. ஜி. எம். விருத்தாசலம் பி.எஸ்சி . முத > முதலாண்டு பயின்ற காலத்தில் ஜி.எம். விருத்தாசலம் என்ற இளைஞர் அறைத்தோழராக இருந்தார். இவர் யார் என்பதை முன்னரே விளக்கியுள்ளேன். அப்போது தான் பள்ளியை விட்டு இடைநிலை வகுப்பில் (Intermediate) முதலாண்டு மாணாக்கனாகச் சேர்ந்தவர், இலால்குடியில் மாணாக்கர் விடுதியில் இருந்து கொண்டு படித்தபோது விடுதில் பொறுப்பிலிருந்த திரு. வி. பால சுப்பிரமணியபிள்ளை அவர்களால் படிப்பில் நன்கு ஊக்கு விக்கப் பெற்றவர். உயர் நிலைப்பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வந்த பொழுதே நல்ல ஆங்கிலம் பேசுவார். இது பாலசுப்பிர மணியபிள்ளை அவர்கள் தந்த பயிற்சி என்பதை இப்போதும் நினைந்து பார்க்கின்றேன். நான் முசிறியில் பயின்றபோது திரு. கே. இராமச்சந்திர அய்யர் மாணாக்கர் விடுதிப் பொறுப்பில் இருந்த போது எங்கட்குத் தந்த பயிற்சியைவிட சற்று அதிகமாகவே இவர் பயிற்சி தந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. மாணவர் பருவத்தில் ஆசிரியர் நல்ல வழி காட்டியாக அமைந்து வீரவழிபாட்டுக் குரியவராக அமைந்தால் வளையும் நிலையிலுள்ள இளைஞர் உள்ளம் முன்னேற்றப்பாதையில் நன்கு செல்வதற்கு வாய்ப்பு உண்டாகும், 7, சிவயோகசாரம் - 89