பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி . எம். விருத்தாசலம் 399 விருத்தாசலம் படிப்பில் பேரார்வமுள்ளவர். இடை நிலைவகுப்பில் முதலாண்டு பயிலும்போதே காந்தியடிகளும் பண்டித சவகர்லால் நேருவும் இவருக்குக் குறிக்கோள் மனிதர்களாவும், வீரவழிபாட்டுக்குள்ளவர்களாகவும் இருந் தனர். காந்தியடிகளின் My Expriments with Truth (சத்திய சோதனை), நேருவின் My Autography, Glimpses of World History, Discovery of India என்ற ஆங்கில நூல் களைச் சொந்தத்தில் வாங்கி வைத்துக்கொண்டு படித்தவர். இம்மாதிரி நூல்களை ஒரே மூச்சில் படிந்தால் நல்ல பயன் காணலாம். நூலகத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொண்ட மற்றோர் இளைஞரை அக் காலத்தில் நான் கண்ட தில்லை. ஏராளமான ஆங்கில நூல்களை ஊன்றிப் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டதோடன்றி பல்வேறு கருத்துச் செல்வத்தையும் பெற்றுக் கொண்டார். இடை நிலைவகுப்புத் தேர்வில் நல்ல மதிப் பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். வரலாறு, பொருளியல், அளவையியல் (Logic) என்ற பாடங்களை விருப்ப பாடங் களாக எடுத்துக் கொண்டு படித்தவர். இவற்றில் உயர்ந்த மதிப் பெண்கள் பெறுவது சிரமம். நன்கு உழைக்கவேண்டும். ஆங்கிலத்தை வளமாக எழுதுபவர்கள் தாம் நல்ல மதிப் பெண்கள் பெறமுடியும்; முதல் வகுப்பிலும் தேறமுடியும். இவர் வாங்கிய நூல்களை நான் விடுமுறையில்தான் படிக்க முடிந்தது. அறிவியல், கணிதம் விருப்ப பாடங்களாக எடுத்துப் படிப்பவர்களுக்கு கல்லூரி வாழ்வில் அதிக வேலை களிருக்கும். கணிதபாடங்கள் நடைபெறும்போதே அதிக மான கணக்குகளை வீட்டில் செய்ய வேண்டும். விட்டுப் போனால் கணித அறிவில் பிற்போக்கு நிலை ஏற்பட்டு விடும், மேலும் தொடர்ந்து நடைபெறும் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுவிடும். அறிவியல் பாடங் க ளி லு ம் அதி கமான சோதனைகள் செய்ய வேண்டி