பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 நினைவுக் குமிழிகள்-1 வரும், நுட்பமான எடைகளைக் காட்டக் கூடிய வேதியியல் தராசுகள் பத்து தான் ஆய்வகத்தில் இருந்தன. ஆதலால் நிறுக்கும் பணிகள் வரும்போது சனிக்கிழமைகளில் காலை ஏழரை மணிக்கே சோதனைக்கூடங்களுக்குப் போக வேண்டி யிருக்கும், வேதியியலில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று சோதனைகளும், இயற்பியலில் ஒரு சோதனை யும் செய்ய வேண்டியது இன்றியமையாதது. எடுகோள்களைப் பட்டிய லிட்டு பதிவேடுகளில் அழகாகக் காட்டவும் தேவை யான இடங்களில் படங்கள் வரையவும் வரைபடங்கள் (Grabhs) வரையவும், சோதனைகள் செய்த முறைகளைப் பதிவேடுகளில் எழுதவும், பதிவேடுகளைக் குறித்த காலத்தில் பேராசிரியர் பார்வைக்கு வைக்கவும் அதிகக் காலம் தேவைப் படும். தவிர, அறிவியலில் நல்ல அறிவு ஏற்படவேண்டு மானால் பாடநூல்களேயன்றி நூலகத்திலும் துறை நூலகத் திலும் சில நூல்களை எடுத்துப் படித்து குறிப்புகளெடுத்திக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பொது அறிவை வளர்க்கக் கூடிய நூல் களில் அதிகமாக கவனம் செலுத்த முடிவதில்லை . விருத்தாசலம் ஏராளமான நூல்களைப் படித்தார். இடைநிலை வகுப்பில் படிக்கும் போதே ஏராளமான ஆங்கில நூல்களைப் படித்தார். நன்றாக ஆங்கிலத்தில் உரை யாடும் பயிற்சியை திரு, வி. பாலசுப்பிரயணியம் பிள்ளை அளித்ததாக நான் கருதுகின்றேன். பள்ளியில் எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்றதால் அங்கு ஆங்கில அறிவு வளர்வதற்கு வாய்ப்பில்லை; தமிழிலும் நல்ல அறிவு பெற முடியாத நிலைதான் நிலவியது. ஆங்கிலம் பாடமொழியாக இருக்கும்போது ஆங்கில அறிவு கணிசமாக வளர்வதைக் காண முடிகின்றது. ஒவ்வொரு பாட ஆசிரியரும் மாணவர்கள் மொழியில் செய்யும் தவறுகளைத் திருத்துவர். ஆனால் அக்காலத்தில் தமிழில் பாடங்களைக் கற்கும்போது இம்