பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. எம். விருத்தாசலம் 401 மாதிரி நிலை ஏற்படுவதில்லை. பாடநூல்களும் நல்ல தமிழில் எழுதப்பெறுவ தில்லை . கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ் உணர்வுடன் கற்பிப்பதில்லை. ஐம்பதாண்டுகட்குப் பிறகு இன்றைய நிலையிலும் மொழியுணர்வு நன்னிலையில் இருப்பதாகத் தெரியவில்லை . தமிழ் எம். ஏ. படித்து, எம், ஃபில் பட்டமும் வாங்கிய மாணாக்கர்களில் பெரும் பாலோர்க்கு பிழையின்றி எழுதமுடியாத நிலையைக் காணும்போது அழுவதா? சிரிப்பதா? என்ற நிலைதான். விருத்தாசலம் பி.ஏ. (ஆனர்ஸ்) பொருளாதாரம் படித்து வெற்றியடைந்த பின் சட்டக்கல்லூரியில் சென்னையில் படித்தார், சில ஆண்டுகள் திருச்சியில் எஸ். அரங்கராசனிடம் (இவர் அக்காலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர்; பின்னர் மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று சிறந்த முறையில் பணியாற்றி டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உயர்ந்து ஓய்வு பெற்றவர்). இள நிலை வக்கீலாகப் பணி யாற்றினார். பின்னர் தனியாக அலுவலகம் தொடங்கிப் பலர் அவர் கீழ் பணியாற்றும் நிலையை எய்தினார். குற்றம் பற்றிய வழக்குகளில் மட்டிலுமே கவனம் செலுத்தி வருகின்றார். எத்தனையோ தூக்குத் தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பல கொலைக்குற்றங்களில் வீணாக மாட்டிக் கொண்ட அப்பாவி மக்களை நிரபராதிகளாக ஆக்கிய நற் பெயரும் இவருக்கு உண்டு. பல வழக்குகள் பற்றிய விவரங் கள் தெரியுமெனினும் அவற்றை ஈண்டுக் குறிப்பிடுவது மற்றொன்று விரித்தலாக முடியும். சில ஆண்டுகட்கு முன் கிளைவ் மாணவர் விடுதியில் காவலர் அடாவடித்தனமாக நடந்து கொண்ட வழக்குபற்றி எல்லோரும் அறிவர். இது நாடறிந்த பெரிய வழக்காக - 26-