பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 நினைவு குமிழிகள்-1 மாறிப் பல மாதங்கள் நடந்தது . பழைய மாணவர் என்று கருதி புனித சூசையப்பர் கல்லூரி நிர்வாகம் அந்த வழக்கை நடத்தம் பொறுப்பை இவரிடம் தந்தது. மிகத் திறமையாக நடத்தி வெற்றி பெற்றார். அறிஞர்கள் அதிசயிக் கத் தக்க நிலையில் வாதிட்டார் விருத்தாலம், முதல்வர் இவருடைய திறமையை மெச்சி தொகை போடாமல் ஒரு காசோலையை இவரிடம் தந்து விருப்பமான தொகையைப் போட்டுக் கொள்ளும்படி பணித்தார். சாதாரணமாக இந்த வழக்கில் அவருக்குக் குறைந்தது ரூ 25,000; = தரலாம்; ஆனால் முதல்வரை நோக்கி, நான் கல்லூரியின் பழைய மாணவன். இக்கல்லூரியில் படித்தமையால் தான் பல்திறன் கள் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன. பேராசிரியர் மறைத் திரு கார்டி அவர்கள், பேராசிரியர் இருதயசாமி ரெட்டியார், பேராசிரியர் ஆரோக்கியசாமி ரெட்டியார் போன்றவர் களிடம் பயிலும் வாய்ப்புகள் கிடைத்தன. பாடங்களில் பெற்ற அறிவுத்திறன் ஒருபுறமிருக்க இன்று நான் பெரியோர்களால் சிறந்த வழக்குரைஞர் என்று கருதத் தக்கவனாக இருப்பதற்குக் காரணம் இக்கல்லூரியில் யான் பெற்ற பயிற்சியேயாகும், ஆகவே, என் உழைப்பு கல்லூரிக்கு அன்பளிப்பாக இருக்கட்டும், பழைய மாணவர் ஒருவர் இங்கு இப்போது பயிலும் மாணாக்கர்கட்காகப் பாடு பட்டார் என்று வரலாறு கூறட்டும்” என்று தன் உழைப்புக் காகப் பெற வேண்டிய ஊதியத்தைப் பெற மறுத்து விட்டார். இவர் நடந்து காட்டிய முறை இன்றைய மாணாக்கர் உலகிற்கு ஒரு படிப்பினையாக இருக்கும் எனக் கருதலாம். முதலாண்டுப் படிப்பு ஒரு விதமாகச் சிரமமின்றி நிறை வெய்தியது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் என் மைத்துனர் ரூ 400/- வரை உதவினார். ரெட்டி ஜன சங்கத்தின் மூலம் ரூ 100/- கிடைத்தது, ரூ. 500/-ஐக்