பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலை இரண்டாம் ஆண்டு 403 கொண்டு சிக்கனமாக வாழ்ந்து முதலாண்டுப் படிப்பைக் கடந்தேன். பகுதி ஒன்று ஆங்கிலத் தேர்வும் முடிவு எய்தியது. இனி இரண்டாம் ஆண்டில் அறிவியல் மட்டிலும் தான் படிக்க வேண்டும், குமிழி -52 52. இளங்கலை இரண்டாம் ஆண்டு 1933-கோடை விடுமுறையைப் பெரும்பாலும் பொட்டணத்திலேயே கழித்தேன். சில நாட்கள் கோட்டாத் தூரில் என் அன்னையாருடன் வாழ்ந்தேன். இந்த ஆண்டுச் செலவிற்குத் தன்னால் உதவ முடியாதென்று என் மைத்துனர் கையை விரித்துவிட்டார், கோட்டாத்தூரிலும் என் அன்னையார் உதவும் நிலையில் இல்லை. சிறு பண்ணையில் வரும் வருமானம் வேளாண்மை முட்டு வழிக்கே போதவில்லை. பேருந்து அல்லது சிற்றுந்து போன்ற தானியங்கிகளில் போடப்படும் நீர் வண்டியிலேயே வட்டா காரமாகச் சுழன்று வண்டியிலுள்ள பொறியின் வெப்பத்தைத் தணிப்பது போலவே, வேளாண்மையில் வரும் சிறிய வருமானம் வேளாண்மைத் தொழிலேயே சுழன்றுகொண்டே ஓரளவு வேளாண்மைத் தொழில் நடைபெறச் சிரமத்துடன் துணை புரிந்ததேயன்றி என் படிப்புச் செலவிற்குச் சிறிதேனும் உதவவில்லை. ஓய்வு ஊதியமின்றிப் பொருள் களின் விலையேற்றத்தால் இன்று சென்னை நகர வாழ்க்கை சென்னை நரக வாழ்க்கையாக இருப்பதுபோல் அன்று வேளாண்மைப் பொருள்கட்கு நல்ல விலை இல்லாமையால் சொல்லொணாச் சிரமத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டிய தாயிருந்தது. அன்று 'பணச் சுருக்கத்தால் நெருக்கடி; இன்று 'பண வீக்கத்தால்' நெருக்கடி. பொருளாதார வல்லுநர்கள் இரண்டு நிலைகட்கும் விளக்கம் தருவார்கள்.