பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 நினைவு குமிழிகள்-1 என் மைத்துன ரின் “ஏழை வேஷம்”-கை விரிப்பு- எனக்கு ஒரு புதிராகவே இருந்தது. மாமனார் வீட்டு நிதி நிலைமையைப் பற்றி என் மனைவியை உசாவினேன் . பெரிய பண்ணையில் வரும் அதிக அளவுள்ள பொருள்கட்கு நல்ல விலை இல்லாதிருந்தாலும் ஓர் ஐந்நூறு ரூபாய் அந்தப் பெரிய பண்ணைக்குப் பெரிதல்ல; எளிதாக உதவலாம். இரண்டு இலட்ச ரூபாய்வரை கொடுக்கல்-வாங்கல் நடை பெற்று வந்தது. விலைவாசி இறக்கத்தினால் இத்தொழில் சரியாக ந ன ட ெப ற வி ல் ைல. கொடுக்கல்-வாங்கல் வேளாண்மைப் பெருமக்களிடமே நடைபெற்று வந்தமையால் அவர்களால் வட்டி கூட சரியாகக் கட்ட முடியவில்லை, இராஜாஜி அவர்களால் ஏழைமக்களின் பொருட்டு உண்டாக்க பெற்ற விவசாயக் கடன் நிவாரணச் சட்டம், நடைமுறைப் படுத்தப்பெற்று வந்ததால் பணப் புழக்கம் தம்பித்து விட்டது 4, இந்த வட்டித் தொழிலை நாமக்கல்லில் நடத்தி யிருந்தால் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றிருக்கும், கடன் நிவாரணச் சட்டத்தின் காரணமாகக் கடன்களைத் திரும்பப் பெற முயன்றனரேயன்றி புதிதாகக் கடன்களை ஏற்படுத்த வில்லை. இந்நிலையில் வீட்டில் தண்டவாளப் பெட்டியில் இலட்சம் வரை ரொக்கம் இருந்ததை என் மனைவி மூலம் அறிந்தேன். பெட்டியின் சாவி அவள் கையில்தான் இருந்தது. மனைவியைக் கைக்குள் போட்டுக் கொண்டு ரூ. 500/-- பெட்டியிலிருந்து எடுத்தால் இந்தப் பெருந் தொகையில் தெரியப் போவதில்லை, இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடிப்பது பெருந்தவறு என்றே என் மனத்தில் பட்டதால், இந்தத் தவறான நெறியில் செல்ல என் மனம் விரும்பவில்லை. என் மனைவி மனத்திலும் இவ்வழி தோன்றியிருக்க வேண்டும், ஆனால் அவளும் இதைப்பற்றி 'மூச்சு' கூட விடவில்லை.