பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கலை இரண்டாம் ஆண்டு 40s ஒரு யுத்தி தோன்றியது. என் மனைவியிடம் நான் திருமணத்தில் போட்ட 10 சவரன் இரட்டை வடச் சங்கிலி இருந்தது. அதை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கலாம் என நினைத்தேன். இதனை என் மனைவியிடம் தெரிவித்தேன். அ வ ளு ம் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டாள். ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்றுவது எப்படி? இந்தக் கேள்வி என் மனத்தை உறுத்திக் கொண் டிருந்தது. என் மைத்துனருக்குத் தெரியாமல் இதைச் செய்ய விரும்பவில்லை. என் ஒன்றுவிட்ட தமையன் நல்லப்ப ரெட்டியாரை இணைப்பு அலுவலராக (Liaision official) பயன்படுத்திக் கொள்ள நினைத்து அவர் மூலம் என் மைத்துனரிடம் பேசி அவர் கருத்தை அறியுமாறு செய்தேன். என் மைத்துனர் அவரிடம் சொன்னாராம்: அப்படியே செய்யட்டும்; வட்டியை அவரே கட்டி, படிப்பு முடிந்தபின் அசலையும் செலுத்தி அவரே நகையையும் மீட்டிக் கொள்ளட்டும் என்றாராம். இத்திட்டத்தை அவர் காதில் போட்டும் கூட வீட்டில் தண்டவாளப் பெட்டியில் உறங்கும் ஓர் இலட்சம் ரூபாயில் சிறிது எடுத்து உதவலாம் என்ற கருணை கூடத் தோன்றவில்லை. அவருடைய உள் மனத்தை ஃபிராய்டு என்ற உளவியல் வல்லுநராலும் அறிய முடியாது என்று இப்போது நினைந்து பார்க்கின்றேன், நகையை வங்கியில் நானே அடமானம் வைக்க விரும்ப வில்லை, என் தமையன் பேரில் கடன் வாங்க நினைத்து அண்ணா , நீங்சுள் நகையை நாமக்கல்லிலுள்ள கரூர் வைஸ்யா பாங்கியில் அடமானம் வைத்து வாங்கித் தாருங்கள், சவரனுக்கு ரூ 25/- கடன் தருவதாக அறிகின் றேன். மூன்று மாதம் வட்டி முதவில் எடுத்துக் கொண்டுதான் கடன் தருவார்கள். ரூ 225/- இந்த நகைக்குக் கிடைக்கும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீங்களே வட்டி கட்டிக் கொள்ளுங்கள். என் படிப்பு முடிந்து திரும்பியதும் நீங்கள்