பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 நினைவுக் குமிழிகள்--1 கட்டிய வட்டியையும் தந்து விடுகின்றேன், என்று கேட்டுக் கொண் டேன். அவரும் ஒருவாறு ஒப்புக் கொண்டு நாமக்கல் சென்று தன் பேரிலேயே கடன் வாங்கி என்னிடம் பணம் தந்து விட்டார். கோடை விடுமுறை கழித்துக் கல்லூரி திறந்ததும் நான் திருச்சி சென்று கல்லூரிக்கு வழக்கம் போல் போய் வரலானேன். தேவையுள்ள பணத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு மீதியைத் தெப்பக்குளம் அஞ்சல் நிலையத் தில் சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்துக் கொண்டேன். இந்தப் பணத்தையும் மாதந்தோறும் ரெட்டி ஜனசங்கத்தி லிருந்து கிடைக்கும் ரூ 10/-யும் கொண்டு சில மாதங்களைக் கவலையின்றித் தள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். இந்த ஆண்டு கவலையின்றிச் செல்வதற்கு இன்னும் ரூ 200/- வேண்டுமே; அதற்கு என்ன செய்வது? என்று யோசித்த வண்ணம் இருந்தேன். கோட்டாத்தூரில் வைக்கோர் போர் போடும் இடம் ஒன்று ஊரையொட்டி இருந்தது. அப்போது விற்றால் ரூ 500/-க்குப் போகும். ரூ 250/-க்கு யாராவது வாங்கிக் கொள்வார்கள் என நினைத்து விற்கும் எண்ணத்தைப் பலருக்குத் தெரியப்படுத்தி னேன், ரூ 200/-க்குத் தான் விற்க முடிந்தது. என் அண்டை வீட்டுச் சாம்பசிவரெட்டியார் என்பவர் தனக்குத் தேவை யில்லாதிருந்தும் என் படிப்பிற்கு உதவும் பொருட்டே வாங்கிக் கொண்டார். அதை வைத்துக் கொண்டு இளங்கலைப்பட்டப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது, இப்போது அது ரூ 10,000/-க்குப் போகும். இப்படியே பல சொத்துகளை வயது வராத நிலையில் (Minor) மூன்றில் ஒருபாக விலைக்கு விற்கும்படி நேரிட்டது. திருமணத்தால் ஏற் பட்ட கடனுக்குக் குடியிருந்த வீட்டை ரூ 1000/-க்கு விற்றுக் கடனை அடைத்தேன். இப்போது அது ரூ30 000/-ப் போகும் . இல்லத்தை விற்று இல்லத்தரசியைப்பெற்றேன்!ஆனால் அவள் சொந்த இல்லம் இல்லாத இல்லத்தரசியானாள், 1983-இல்