பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப்படிப்பும் நூலகப்பழக்கமும் 407 (ஓய்வு பெற்றுஏழாண்டுகட்குப்பிறகு சொந்த வீடு அமைந்தது அதை எம்பெருமான் ஏழுமலையான் வாழும் "வேங்கடம், என்று பெயர் சூட்டி அவனுக்குரிய தாக்கினேன். இப்போது நாங்கள், மக்கள், மருமகள்மார், பேரன்-பேத்திமாருடன் அவன் நிழலில் வாழ்கின்றோம். நகர வாழ்க்கை நிலையான வாழ்க்கையாகிவிட்டது. அவன் அடிக்கீழ் என் பிரார்த்தம் தீரும் வரையில் தமிழ்ப்பணி ஆற்றி வர உறுதிகொண்டுள் ளேன்; அங்ங்னமே ஆற்றிவருகின்றேன். இதனைத் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு அறியும். குமிழி - 53 53. பட்டப் படிப்பும் நூலகப்பழக்கமும் கல்வெட்டுகளில் நூலகத்தைச் 'சரசுவதி பண்டாரம்' என்று குறிப்பிட்டுள்ளதைக் கல்வெட்டுகள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தபோது கண்டதுண்டு. உண்மையில் நூலகம் கலைமகளின் திருக்கோயில் களே, ஆங்கில அறிஞர் பேக்கன் என்பார் கூட. நூலகங்கள் கோயில்கள் போன்றவை என்றும், இவை உண்மையான நற்குணங்கள் நிறைந்த, ஏமாற்றல் அல்லது வஞ்சகக் குணமற்ற, ஞானிகளின் நினைவுச்சின்னங் கள் வைத்துக் காப்பாற்றப்பெற்றுள்ள இடங்கள் என்றும் கூறுவர். மற்றோர் அறிஞர் நூலகத்தை இலக்கியத்தின் நிலையடுக்குப் பேழை என்று போற்றுவர். மாணாக்கர்கள் நூலகத்தை நன்முறையில் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்வில் இப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கன்னமேரா பொது நூலகம் பல்கலைக் கழகநூலகம் போன்ற இடங்களில் பல்வேறு வகை நூல்கள் வைக்கப்பெற்றிருக்கும்; பல்வேறு வகை அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், ஆய்வு வெளியீடு கள் வைக்கப்பெற்றிருக்கும். இவற்றைப் பயன்படுத்தும்