பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 நினைவுக் குமிழிகள்-1 முறைகளைத் தெரிந்து கொள்வதே ஒரு கலையாகும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்துத் தேவையான செய்தி களைத் திரட்டி வைத்துக் கொள்வதென்பது எளிதான செயலன்று. இதனை நன்கு உணர்ந்து தெளிந்த சமண முனிவர், கல்வி கரையில; கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கிற் பிணிபல;-- தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீ ரொழியப் பாலுண் குருகின் தெரிந்து' என்று கூறிப் போந்தார். என் கல்லூரி வாழ்க்கையில் கல்லூரி நூலகத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன். பதினைந்து நாட் களுக்கொரு முறை மூன்று நூல்கள் வீதம் தொடர்ந்து பெற்றுப் படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். அமயம் வாய்க்கும் போதெல்லாம் திருச்சியில் உள்ள மாவட்ட நூலகத்திற்குச் சென்று சில இலக்கிய நூல்களையும் பொது அறிவு நூல்களையும் படிப்பதுண்டு, செய்தித் தாள்களில் வரும் நூல்களின் மதிப்புரைப் பகுதியை விடாது படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் அன்றாடம் வெளி யாகும் நூல்கள் ஓரளவு அறிமுகமாகும். காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட சில நூல் களைப் படித்து முடித்து விடுவேன் . நூலகங்களில் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தல் வேண்டும். நச்சுக் கருத்துகளை ஊட்டும் நூல்களை நூலகத்திலிருந்து நீக்கி விடுதல் வேண்டும். “ஒருவேளை மருந்து ஒருவரை ஒருமுறை தான் கொல்லும்; ஆனால் தீய கருத்துகளைக் கொண்டுள்ள நூரல் நீண்டகாலம் மக்கள் மனத் தில் நஞ்சூட்டிக் கொண்டே இருக்கும்” என்றார் ஜான் மர்ரே 8. நாலடியார்-135 (கல்வி)