பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப்படிப்பும் நூலகப் பழக்கமும் 409 என்ற ஆங்கில அறிஞர். நூல்கள் என்பவை பரந்து அகன்ற காலம் என்னும் கடலில் நிறுவப்பெற்ற கலங்கரை விளக்கங் களாகும் என்றார் ஓர் ஆங்கில அறிஞர். ஒவ்வொரு புதிய நாலும் ஒரு கப்பலைப் போன்றது. “எப்படிக் கப்பல் நம்மைக் குறுகிய இடப்பரப்பினின்று அகற்றுகின்றதோ அங்ஙனமே ஒரு புதிய நூல் வாழ்க்கை என்னும் எல்லையற்ற பெருங் கடலுக்குள் இட்டுச் செல்லுகின்றது” என்கின்றார் ஹெலென் கெல்லர் என்ற அறிஞர். ஓர் ஆசிரியரின் இதயத்திலிருந்து எழும் கருத்துகள் அவர்தம் நூலில் அமைந்தால் அவை அந்நூலைப் படிப்போரின் இதயங்களைத் தொடும் என்பதற்கு ஐயமில்லை என்று கூறுவர் கார்லைல் என்ற பேரறிஞர். "புத்தகங்கள் என்பவை கூடுவிட்டுக் கூடுபாய்தல் (Metempsychosis); அவை இறவாமையின் அறிகுறிகள்;, அடையாளங்கள் இறந்தவர்கள் யாவரும் எங்கெங்கோ சிதறிக் கிடக்கின்றனர்; ஒருவரும் அவர்களைக் காண முடியாது, ஆனால் பாருங்கள்! அவர்கள் யாவரும் இங்குள்ளனர்” என்கின்றார் பீச்சர் என்ற மற்றோர் அறிஞர். ஜான்சன் என்ற ஆங்கிலப் பேரறிஞர் சொல்வார்; மரபுப் பண்பு என்பது ஒரு எரிமீன் போல; அது தரையில் வீழ்ந்து விட்டால், மீண்டும் எரிய வைக்க முடியாது, நினைவில் குறுக்கீடு இருந்தால், திரும்பவும் நினைவுகூர முடியாது, ஆனால் எழுத்து வடிவம் பெற்ற ஞானம் ஒரு நிலைத்த அறிவுடைய பொருளாகத் திகழ்கின்றது. அதை மறைந்திருந்த மேகப்படலம் விலகியதும் அது திரும்பவும் சரியான இடத்தில் பிரகாசிக்கின்றது. ஆகவே, நூல்கள் நம்பிக்கைக்குரிய களஞ்சியங்களாகின்றன; அவை சில காலம் புறக்கணிக்கப்பெறினும் அல்லது மறக்கப்பெறினும், அவற்றைத் திரும்பவும் திறக்கும்போது, அவை மீண்டும் அறிவுரை பகர்கின்றன” என்று. நூல்கள் நமக்கு