பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 நினைவுக் குமிழிகள்-1 எப்பொழுதும் தயாராகவுள்ள நிலையான அறிவுரை கூறுப் வர்களாக போதகாசிரியர்களாகத் திகழ்கின்றன; அவை தன் னலமற்றவையாகவும் உள்ளன. வாய்மொழி பகர்பவர்களை விட இந்த நூல்கள் நற்பயன்களை விளைவிப்பவையாயிருப்ப தால், அவை தம் படிப்பினையை நாம் விரும்பும் அளவும் திரும்பக் கூறுவதற்கு ஆயத்தமாகவே உள்ளன” என்கின்றார் மற்றோர் ஆங்கில அறிஞர். “கையில் பிரம்போ கைத்தடியோ இல்லாமல், வாயில் சீறும் சொற்களையோ சினத்தையோ காட்டாமல் உள்ள ஆசிரியர்களாகத் திகழ்கின்றன நூல்கள்; நாம் அவற்றை நெருங்கும்போது, அவை தூங்கி வழிவ தில்லை: நாம் அவற்றை நாடும்போது, அவை ஒளிந்து கொள்வதில்லை; நாம் தவறிழைக்கும்போது அவை நம்மைக் கடி, வதில்லை ; நாம் அறியாமையுடனிருப்பினும், நம்மைக் கேலி செய்வதில்லை என்கின்றார் ரிச்சார்ட்-டி-பர்ரி என்பார். சில நூல்கள் சுவைக்கக் கூடியவை; மற்றவை விழுங்கத் தக்கவை; ஒரு சில மென்று செரிமானம் செய்யத் தக்கவை” என்கின்றார் பேக்கன் என்ற ஆ 1 கில அறிஞர். இவையெல்லாம் சிந்தனைகளைப்பற்றிய புதிய அகராதி’ * என்ற நூலைப் புரட்டும்போது நான் அறிந்து கொண்ட...வை. வழக்கமாக நூலகத்தைப் பயன்படுத்துவோருக்கு இவ்வுண்மைகள் தெளிவாகப் புலனாகக் கூடியவை. இன்று நாம் ஒரு பெரிய நூலகத்திற்குச் சென்றால் நம் முன்னோர் களும் நம்மிடையே வாழ்பவர்களும் நமக்குச் சொத்துகளாகப் பல்வேறு வகைச் செல்வங்களை வைத்துச் சென்றிருப்பதைக் காணலாம். அவை பாகுபாடு செய்யப்பெற்று நாமே சென்று எடுத்துக் கொள்ளத்தக்கவையாக அடுக்கி வைக்கப்பெற்று இருப்பதையும், நூலகமும் நாம் விரும்பியவாறு அமர்ந்து கொண்டு படிப்பதற்கேற்ற இருக்கை வசதிகளுடன் திகழ் 8. The New Dictionary of Thoughts-Standard book Company-1966.