பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை தேடும் படலம் 447 பெரியவர்கள் இருந்திருந்தால் கிடைத்திருக்கும் யானோ திக் கற்றவன்; எந்தப் பெரியவரையும் எனக்குத் தெரியாது. அக்காலத்தில் நந்தி ரெட்டியார் என்ற ஒருவர் இருபூர்தித் துறையில் பெரிய பதவியில் இருந்தார். அவரை நாடினேன்; அவரும் உண்மையாக முயன்றார். பலன் இல்லை. அவர் மூலம் பயன் அடையும் ஊழ் எனக்கில்லை, அப்போது இம் முறையில் நினைத்துப்பார்க்கும் மனப் பக்குவம் இராவிடிலும் இப்போது (15-10-1988) நினைத்துப் பார்க்க முடிகின்றது. சர் . டி . தேசிகாச்சாரியின் சான்றிதழும் இங்குப் பலிக்க வில்லை, இவருக்கு இருப்பூர்தித் துறையில் மிக்கச் செல் வாக்கு இருந்தது; பலர் இவரிடம் பெற்ற சான்றிதழ்களால் அலுவல் பெற்றனர். ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை: ஊழ் (ஆகூழ்) எனக்கு இவர் மூலம் ஏற்படவில்லை . அடுத்து, பொதுப்பணி ஆணையர் அலுவலகம் தகுதி ஆய்வு சார்ந்த வருவாய்த்துறை ஆய்வாளர் (Probationary Rvenue Inspector), ஒதுக்கீட்டு சார்பதிவாளர் (Reserve sub-registrar) பதவிகட்கு விண்ணப்பங்கள் கேட்டு விளம்பரம் செய்திருந்தது. இரண்டிற்கும் விண்ணப்பித்திருந்தேன். இப்போது தான் பொட்டணத்தில் காப்புக் கட்டி மாரியம்மன் திருவிழா நடைபெற்று வந்த காலம், விழாவில் எனக்குப் பங்கு ஒன்றும் இல்லையாயினும், காவல்துறை அலுவலர் களைச் சந்திக்கும் பொறுப்பை என்னிடம் விட்டிருந்தார்கள். இதனால் அடிக்கடி சேந்தமங்கலம், நாமக்கல் சென்று வரும் பொறுப்புகள் இருந்தன. திரு விழாவின் நடுவில் எனக்குப் பேட்டி வந்தது. பேட்டி நடைபெற்ற இடம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்: இந்த அலுவலகம் கோவை இருப்பூர்தி நிலையத்தருகில் இருந்தது : இப்போதும் அங்கு தான் உள்ளது. ஒரு விடுதியில் தங்கி பேட்டிக்குச் சென்றேன். காலுறை. மேலுறை, கழுத்துப்பட்டை, கால்புதை அரணம் (shoe)