பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 நினைவுக் குமிழிகள்-1 இவற்றை அணிந்து கொள்ளும் பழக்கம் இல்லாதவன்; இப்போது முதன்முதலாக அணிந்து கொண்டு பேட்டிக்குப் போக வேண்டிய நிலை. கால்புதையரணம் நடக்க முடியாத அளவுக்குத் தொந்தரவு கொடுத்தது. விடுதியிலிருந்து குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு சென்றேன். ஒரு விதமாகப் பேட்டி நடைபெற்றது. ஏதேதோ வினாக்கள் விடுக்கப்பெற்றன. பெரும்பாலானவற்றிற்கு நன்கு விடையிறுத்தேன், பலன் இல்லை; சில திங்கள் கழித்து சான்றிதழ்களைத் திரும்கப் பெற்றேன், பெரும்பாலும் இத்தகைய பேட்டிகள் கண்துடைப்பு வேலையாக இருந்ததைப் பின்னர் உணர்ந்தேன். உயர் அதிகாரிகளின் பரிந்துரை இருந்தால் (திரைமறைவில் நடப்பது இது) பதவி கிடை..க்கும். அப்போது 'அரசியல்வாதி கள்' என்ற கூட்டம் இல்லை. எல்லாம் ஓரளவு நியாயமாகவே நடைபெற்றன. அந்தக் காலத்தில் வேலை வாய்ப்புகள் மிகக்குறைவு. அலுவல்களில் இருப்பவர்களின் மக்கள் எளிதாக வேலை பெற்று வந்தனர். எம்போலியர் நாட்டுப்புறத் தார்க்கு-திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல் இருப்பவர்கட்கு-எங்ஙனம் கிடைக்கும்? ஓராண்டுக் காலம் இங்ஙனம் கொன்னே கழிந்தது. கோவயிைலிருந்து திரும்பியதும் மாரியம்மன் திருவிழா வில் ஈடுபட்டேன், காவல் துறை வட்ட ஆய்வாளர் (Circle Inspector) ஒருவரை நாமக்கல் சென்று சந்தித்தேன். ஒரு நாள் கவுண்டர் தெருவிற்கு சுவாமியை எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார், அவர் சொன்னார்: "மிஸ்டர் தம்பி, கவுண்டர் தெருவுக்குச் சாமி போகக் கூடாது என்று நீதிமன்ற ஆணை உள்ளது. அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டா. நீங்கள் எடுத்துப் போகும் அன்று இங்குச் சட்டம் 144 பிரிவின்கீழ் தடைவிதிக்க ஏற்பாடு செய்து விடுகின்றேன். 100 ஜவான்கட்கும், 44 துணை