பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை தேடும் படலம் 449 -


- ஆய்வாளர்கட்கும் (Sub-Inspectors) ஏற்பாடு செய்து விடுகின்றேன், நீங்கள் அந்த ஒருநாள் (இரவு) சுவாமியை எத்தனை தட வை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங் கள், 'கலாட்டா' செய்பவர்களை அரஸ்டு செய்து காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடுகின்றேன். இதற்குக் கைம்மாறாக ரூ300/- எனக்குத் தந்துவிட வேண்டும். நான் வந்து போவ தற்குக் கார் வாடகை ரூ 50;> தனியாகத் தரவேண்டும் என்றார். சரி என்று ஒப்புக் கொண்டு உரிய தொகைகளை அவரிடம் தந்தேன் . பேசியபடி சுவாமி ஊர் வலமாகக் கவுண்டர் தெருவிற்குப் பலமுறை எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கு முன்னரே '144 விதி அமுலிலுள்ளது' என்று 'டாம்டாம்' மூலம் பலமுறை ஊரில் அறிவிக்கப்பெற்றது. திருவிழாவில் 'கலாட்டா' செய்பவர்கள் கம்பி எண்ணும்படி நேரிடும் என்று எச்சரிக்கைச் செய்தியைப் பரப்பினர் காவலர். முக்கிய நிகழ்ச்சியன்று காவலர் படை வந்து சேர்ந்தது. முக்கியமான இடங்களில் ஐவான்கள் நிறுத்தப் பெற்றனர். அன்று மாலை சிற்றுண்டி காஃபி, இரவு விருந்து, மறுநாள் காலை சிற்றுண்டி காஃபி. என் மைத்துனர் வீட்டில் தரப்பெற்றன. உடையார் மார்கள் திடீர் காவல் துறை ஏற்பாட்டை எதிர்பார்க்கவில்லை. மெளனமாயினர். வட்ட ஆய்வாளர் வாக்குத் தந்தபடி எல்லாம் அமைதியாக நடைபெற்றன. என் மைத்துனர் மனம் குளிர்ந்தது; கவுண்டர்மார்கள் களிப்பெய்தினர், குறிப்பாகப் பெண் கள் பேருவகை கொண்டனர். தங்கள் தெருவிற்கு மாரியம்மன் பல்லாண்டுகள் கழித்து வந்தமை குறித்து மிகவும் மகிழ்ந்தனர், என் மைத்துனரை ம ன மாரப் பாராட்டினர். சில மாதங்களாக ஊர் பூராவும் சுவாமி கவுண்டர் தெருவிற்குப் போனதைப் பற்றியே பேச்சு நிகழ்ந்த வண்ணம் இருந்தது. -29-