பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 நினைவு குமிழிகள் -1 இந்த விழாவில் என் மைத்துனருக்கு ரூ 5000/- கையைப் பிடித்திருக்கும் என்பது என் கணிப்பு. திறந்த குழாய் வழியாகத் தண்ணீர் ஓடுவதுபோல் தண்டவாளப் பெட்டியி லிருந்து பணம் போய்க் கொண்டே இருந்தது. தண்டவாளப் பெட்டியை அடிக்கடித் திறப்பதும் மூடுவது மாக இருந்ததால் பணம் பறந்து செல்வதை என்னால் ஊகிக்க முடிந்தது. அண்ணன். கேட்கும்போதெல்லாம் தங்கை பெட்டிச் சாவியைக் கொடுத்தவண்ணம் இருந்தாள் , என் மாமியாரும் மாமனாரும் காவலர் படைக்கு உணவு தருவதில் மூழ்கி யிருந்தனர். உள்ளூர் பாபு ரெட்டியார் என்பவர் 'நளபாகத் தில்' வல்லவர். அவர்தான் உணவு தயாரிப்பதில் முக்கிய பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். வெளிவாசலுக்கு உட் புறமாகவுள்ள திண்ணையில் பெரும்பாலும், வெளிப்புறமாக வுள்ள திண்ணையில் சிலசமயமும் பணம் காத்த பூதம்போல் உட்கார்ந்த வண்ணம் இருக்கும் (அப்போது 70 வயதுக்கு மேலிருக்கும்) பாட்டி நாகம்மாளும் தன் பேரன் முன் நின்று நடத்தும் மாரியம்மன் திருவிழாவைப்பற்றி மன மகிழ்ச்சி யுடன் இருந்ததை அவள் முகத்தில் பிரதிபலிப்பதைக் கண்டேன். சாவியை அடிக்கடிக் கேட்குப்போ தெல்லாம் அண்ணனுக்குத் தரும் தங்கையும், செலவு செய்யும் முறையை நேரில் காணும் நானும், செலவு செய்யும் மைத்துனரும் பணம் பல்வேறு துறையில் பறந்து செல்வதை அறிவோம், என் திருமணத்திற்கு முன்னர் " நீ வந்து ஒட்டி க்கொள், பிறகு படிக்க ஆகும் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டா; நானே எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வேன்” என்று சொன்ன வாக்கு காற்றில் பறந்ததை யும், நான் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பில் இருந்தபோது “பணமே இல்லை; நீயே பார்த்துக் ெகாள்' என்று கூறிக் கையை விரித்ததையும், இப்போது பணம் எங்கிருந்து வந்தது என்ற நினைப்பும் என் சிந்தனையில் எழுந்து என்னை