பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி நோயுற்ற காலத்தில் 451 உள்ளுக்குள் சிரிக்க வைத்தன, என் வினைப்பயனை நினைத்து நொந்து கொள்கின்றேன். இப்படி ஒரு பிராமண ச் சிறுவன் தொல்லைப்பட்டால், அவனை மருமகனாக ஏற்ற செல்வச் செழிப்புள்ள மாமனார் அவனை இப்படி நட்டாற்றில் விட்டுவிடுவாரா? அதுவும் சுறுசுறுப்பும் படிப்பிப் பேரார்வமும் கொண்டவன் தம் மருமகன் என்பதைத் தெரிந்து கொண்டால், என்னென்ன செய்வார்? என் றெல்லாம் என் சிறு மனம் அப்போது எண்ணிக் கொண்டது. ஏதோ இறையருளால் இளங்கலைப் பட்டம் சிறப்பாகப் பெற்றது குறித்து ஓரளவு மனம் நிறைவு கொண்டேன். குமிழி-59 59. என் மனைவி நோயுற்ற காலத்தில் வேலை தேடும் படலம் நடைபெற்ற ஆண்டில் என் மனைவி நோயுற்றாள். சிறுநீரகங்களில் ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது, உடல் முழுவதும் பூதாகாரமாக வீங்கியது. வீட்டிலுள்ளவர்கள் யாவரும் பேரச்சத்தால் பீடிக்கப் பெற்றனர். அக்காலத்தில் திருச்சியில் புகழ் பெற்ற மருத்துவர் டாக்டர் காளமேகம். தென்னூர் சாலையில் அவருடைய மருத்துவமனை இருந்தது, (அது தான் இப்போது கோவிந்தராஜ கல்யாண மண்டபமாக மாறியுள்ளது. கட்ட டத்திற்கு முன்புறமிருந்த காலியிடம் திருமண மண்டபமாக மாறியுள்ளது, முன்பிருந்த பழைய கட்டடம் பழுது பார்க்கப் பட்டுத் தங்கும் அறை களாக அமைந்துள்ளன. கட்டடத்தின் பின்புறப் பகுதி சமையற் கூடமாக அமைந்துள்ளது). அதில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தாள் என் மனைவி. அறை வாடகை நாள் ஒன்றுக்கு ரூ 10/- இரண்டு மாதம் வாடகை மட்டிலும் ரூ500/ தர நேர்ந்தது. மருந்துச் செலவு, டாடர் கட்டணம் இந்த வகையில் ரூ 600; -வரை செலவாயிற்று.