பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி நோயுற்ற காலத்தில் 453 பிராமணர்கள் எங்கட்கு வி ரே ர தி க ள் அல்லர் . பிராமணீயத்தைத்தான் நாங்கள் சாடுகின்றோம் எ ன் று முழங்கினார். இவர் மறுநாள் ஏதோ ஒரு நோயின் காரண மாகக் காளமேகம் மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர் மருந்தினைக் குத்திப் புகுத்தச் சீட்டு எழுதித் தந்தார். பேசிக் கொண்டே நாசூக்காக ஊசி மூலம் மருந்தைச் செலுத்தினார் சம்பவுண்டர் கந்தசாமி, “சார், வலிக்கிறது என்று சற்றுக் கதறினார் நண்பர், "என்ன ஐயா, நேற்று நீங்கள் கூட்டத்தில் நாங்கள் பிராமணர்களைத் திட்டவில்லை; பிராமணீயத்தைத் தான் சாடுகின்றோம்' என்று முழங்கினீர்கள், இப்போது நான் உங்கள் நோய்க்குத்தானே ஊசி போடுகிறேன். நீங்கள் ஏன் கதறுகிறீர்கள்? என்றார். நண்பருக்குப் பேச வாய் எழவில்லை. பிராமணீயத்தைச் சாடினால் பிராமணர்களைக் குறிப்பிடாது இருக்க முடியாது. நோய்க்குச் சிகிச்சை செய்யும் பொது நோயாளருக்குத்தான் அதனைச் செய்ய வேண்டும். உடலின்றி நோய் இல்லை, பிராமணர்களின்றி பிராமணீயம் இல்லை என்பதை எடுத்துக் காட்டினார் கந்தசாமி, அவருடைய சந்தர்ப்பப் பேச்சு என்னை வியக்க வைத்தது. அதனால் அதனை இன்றும் நினவுகூர முடிகின்றது . என் மனைவி நோய்வாய்ப்ட்டது எனக்கு ஓயாத கவலையை அளித்தது. மாமனார் வீட்டில் செலவும் செய்தாலும் மனமின்றிச் செய்தனர். பணத்தைப் பற்றிக் கவலைப்பட்ட அளவு மகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. “கன்னி கழிந்தது; மகள் இறந்தாலும் கவலை இல்லை " என்று கூட நினைத்தார்களோ என்று என் மனம் ஒரு சமயம் சிந்திக்கவும் தொடங்கியது. அரக்க மனம் படைத்தவர்கள் என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். இதைப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றால் நான் கருதியது சரி என்றே உறுதியாயிற்று. ஒன்று விட்ட என் தமையன் மனைவி என் மாமியாரிடம், “உங்கள் மருமகன் மிக்க கவலையுடன்