பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 நினைவுக் குமிழிகள் -1 அலைந்து திரிகின்றார். மனைவிமீது உயிர் வைத்திருக் கின்றார். உங்கள் பாசத்தை விட அவர் பாசம் மிஞ்சி நிற்கின்றது. அவரைப் பார்க்கும்போது என் மனம் மிகவும் வருந்துகின்றது” என்று சொன்னாளாம். அதற்கு என் மாமியார், "நீ சொல்லுவது உண்மைதான். நானும்தான் அதைக் கவனித்தேன். என் மகளுக்கு ஏதாவது நடக்க முடியாதது நடந்து விட்டால், அவருக்குப் பணக்காரர்கள் யார் பெண் கொடுப்பார்கள்? இதை நினைத்துக் கொண்டு தான் அவர் துன்பப்படுகின்றார்" என்று சொன்னார்களாம். “ இந்தப் பெண் இவ்வளவு செலவு வைத்து விட்டாளே , ஒழிந்தாலும் துன்பம் இராது என்று நினைத்தார்களோ என்று இப்போது என் மனம் எண்ணுகின்றது. இப்போது தெலுங்குக் கவி வேமனர் சஞ்சப் பிரபுக்களைப் பற்றிச் சாடுவது நினைவிற்கு வருகின்றது. கஞ்சப் பிரபு ஒருவர் வீட்டில் தந்தை இறந்து போனாராம். வீட்டிலுள்ளவர்கள் அனைவருமே அழுது அழுது புரண்டார்களாம். பார்த்தவர் கள் யாவரும் “'என்ன தந்தை பாசம்! என்ன கண வன் பாசம் என்று வியந்தார்களாம். வேமனர் சொல்லு கின்றார்: அவர்கள் அழுவதெல்லாம் பெரியவர் மறைந்தார் என்ற துக்கத்தினாலன்று. 'வீட்டை விட்டுப் பிணம் போவதற்குக் குறைந்தது ரூ 100- செலவாகுமே' என்று நினைத்தன்றோ அழுகின்றார்கள் என்று. திருச்சி மருத்துவமனையை விட்டுப் பொட்டணத்தில் இரண்டு மாத காலம் தங்கியிருந்தேன். உடலின் வீக்கம் குறைவதும் அதிகப்படுவதுமாக இருந்து கொண்டிருந்தது. முதலில் இருந்த அளவு நோயின் தீவிரம் இல்லை ; குறைந் திருந்தது. இதனால் என் கவலையும் குறைந்து விட்டது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பி விட்டேன். சென்னையில் படிக்க ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினேன், ரூ 6/-க்கு அனைத்தும் அடக்கும் பை