பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி நோயுற்ற காலத்தில் 455 (Hold A11) வாங்கினேன்; ரூ. 14க்கு ஒரு குப்பம் மெத்தை வாங்கினேன். அதற்குக் கதர் துணியில் ஓர் உறை தைத்துப் போட்டுக் கொண்டேன். மாமனார் வீட்டில் இலவம் பஞ்சு நெற்று ஏராளமாக இருந்தது. இரண்டு சிறிய தலையணை வேண்டும் என்று என் மைத்துனரிடம் சொன்னேன். எத்தனையோ ஆட்கள் அவர் பண்ணையிலிருக்க, அவர்களில் ஒருவ' ரை ஏவா து, தானே நெற்றுகளை உடைத்து கொட்டைகளைப் பஞ்சினின்றும் நீக்கி பஞ்சை வில்லால் அடித்துத் தலையணைகளைத் தயார் சென்று கொண் டிருந்தார். நான் அதைப் பார்த்த வண்ணம் ஏதோ படிப்பில் ஈடுபட்டிருந்தேன், என் மைத்துனர் என்னைப் பார்த்துக் கொண்டே தலையணைகள் தயாரிக்கும் செயலில் ஈடுபட்ட டிருந்தார். கோட்டாத்தூரிலிருந்து என் தாயார் என் மனைவியின் உடல் நிலையை விசாரித்து அறிந்து போவதற்காகப் பொட்டணம் வந்திருந்தார். என் மைத்துனர் என் அன்னை யாரிடம், "பார் அக்கா உங்கள் மகன் மிகவும் சோம்பேறி. நான் தலையணைகள் தயார் செய்து கொண்டிருக்கிறேன் அவருக்காக . அவர் காலை நீட்டிப் படித்துக் கொண்டு இருக் கின்றார். அவர் இந்த வேலையைச் செய்யக் கூடாதா? அவருக்குரிய தலையணைகள் தாமே இவை?" என்று சொன்னார். நானும் இதைக் கேட்டுக் கொண்டுதானிருந் தேன், என் அன்னையார் இதற்குச் சூடான பதில் கொடுத் தார். இராமசாமி, என்ன இருந்தாலும் என் மகன் உங்கள் வீட்டு மாப்பிள்ளை . மாப்பிள்ளை மாமனார் வீட்டில் வந்து வேலை செய்யத் தொடங்கினால் உங்கட்கு இளக்காரமாகப் போகின்ற நிலை ஏற்பட்டு விடும். நீங்கள் அவனை உங்கள் பண்ணை வேலையாள் போல் நினைத்து எல்லாவற்றிற்கும் ஏவத்தொடங்கி விடுவீர்கள். உன் தந்தையார் ஆலத்துடையாம் பட்டியிலிருந்து வீட்டு மாப்பிள்ளையாக வந்தார். இன்னும்