பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 நினைவுக் குமிழிகள்-1 அவருக்கு உங்கள் சொத்தை நிர்வாகம் செய்ய எந்த விதமான உரிமையும் இல்லாமலிருக்கின்றார். பண்ணையாள் மாதிரி உழைக்கின்றார். என் மகனை அப்படி நினைக்காதீர் கள், அவன் சோம்பேறி அல்லன். அவனைப்போல் சுறுசுறுப்பாக உழைப்பவனைப் பார்க்க முடியாது. எங்கள் வீட்டில் எல்லாக் காரியங்களையும் செய்வான். உங்கள் வீட்டில் அப்படிச் செய்ய எதிர்பார்க்காதீர்கள். இன்றிருந்து என் மகனைக் குறைவாகவும் பேசாதே; குறைவாகவும் நினைச்காதே” என்று என் அன்னையார் ஆணித்தரமாகச் சொன்னதும் அவர் வாயடங்கிப் போனார், தம்பிக்குத் தமக்கையார் தந்த அறிவுர்ை திலகவதியார் (தருமச் சேனருக்கு) திருநாவுச்கரசருக்குத் தந்த அறிவுரையை ஒத்திருந்ததை நினைத்துக் கொண்டேன். பயிற்சிக் கல்லூரியில் சேரவேண்டும் என்ற எண்ணம் மெல்ல அரும்பத் தொடங்கியது;. தொடர்ந்து கவலையும் அரும்பு விடத்தொடங்கியது . ஆசையும் கவலையும் துன்பத் தின் இணைபுரியாத நண்பர்கள் அல்லவா? இந்த நிலையில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் விட்டது போன்ற ஒரு நிகழ்ச்சியும் தோன்றியது. வேலைதேடும் படலம் ஆண்டில் - ஆகஸ்டு என நினைக்கின்றேன் (1939-40)-ஒரு நாள் சினிமா வசனம் போல் என் மாமியாரும் மைத்துனரும் பேசிக் கொள்ளுகின்றார்கள். நான் கேட்க வேண்டும் என்றே -என் காதில் விழவேண்டும் என்றே நான் திண்ணை யில் சாய்ந்து கொண்டு ஏதோ படித்துக் கொண்டிருந்தபோது இந்த "சினிமா வசனம் நடைபெற்றது . மாமியார் : “'எதற்கோ வைத்திருந்த பணத்தை எடுத்துப் போய் வங்கிக் கடனைக் கொடுத்துவிட்டு நகையை மீட்டிக் கொண்டு வந்தாயே. அந்தப் பணத்திற்கு என்ன வழி செய்யப் போகின்றாய்?' என்கின்றார்,