பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி நோயுற்ற காலத்தில் 457 மைத்துனர் : "அதாவது அம்மா , ந ம மு ைட ய மாப்பிள்ளை சென்னைப் படிப்பிற்காக ஆலத்துடையாம் பட்டியிலுள்ள நிலத்தை விற்கப் போகின்றார். அப்போது விற்றதால் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை நமக்குத் தந்துவிடுவார், பணம் ஈடாகி விடும் என்கின்றார், நான் கேட்கவேண்டும் என்றே என் முன்னிலையில் இந்த உரையாடல் நடைபெறுகின்றது. என் முன்னிலையில் இவ்வாறு பேச வேண்டு மென்று எத்தனை நாட்கள் ஒத்திகை நடத்தினார் களோ, அஃது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். நான் ரூ 700/- க்குதான் அந்த நிலத்தை விற்றேன் என்பதை யும், அத் தொகை என் படிப்பிற்குப் போதும் போதாதாக இருந்தது என்பதையும் நன்றாக அறிந்து கொண்டு பின்னர் இதைப் பற்றிப் பேசவே இல்லை. இதற்கு மூன்று காரணங் கள் எனக்குத் தெரிகின்றன. (1) ஆகஸ்டு இறுதியில் என் மாமனார் கண் படலம் (Cataract) அறுவை சிகிச்சை மேற்கொள்பவராக இருந்தார். நான் திருச்சி சென்று ஜோசப் கண் மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தேன். என் அன்னையார் கோட்டாத்தூரிலிருந்து எங்கட்கு உணவு தயாரிப்பதற்காக வந்து சில நாட்கள் தங்கி யிருந்தார்கள். (2) பொட்டணத்தில் மாரியம்மன் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். நாலைந்து மாதங்களாக என் மைத்துனர் இந்தப் பணியில் மூழ்கியிருந்தார். பல ஆயிரம் ரூபாய் அவர் கையைக் கடித்தது. என் படிப்புக்கு உதவுவதாகச் சொன்னவர் சொன்ன சொல் தவறி நடந்து கொண்டார். ஆனால் திருவிழாவுக்கும் அதனைத் தொடர்ந்து, வழக்கு விஷயமா கவும் பணத்தைத் தண்ணீராகச் செல் விட்டார்,