பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 நினைவு குமிழிகள்-1 இஃது ஒருவர் தங்கும் அறை. டிசம்பருக்குமேல் இருவர் தங்கும் அறைக்கு என் இடத்தை மாற்றிக் கொண்டேன். இதற்கு மாத வாடகை ஐந்து ரூபாய்தான்; சற்றுப் பெரிய அறை. அதிக வாடகைதந்து ஒருவர் தங்கும் அறையாக மாற்றிக் கொண்டேன், A-3 அறைக்குத் தெற்குப் பக்கமாக அமைந்திருந்தன. இந்த வரிசை அறைகள், எ திரில் பெரிய மைதானம். நான் B-5 என்ற அறையில் தங்கியதாக நினைவு. என் நண்பர்களான கே. நாராயணன், எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஆதிநாதன் ஆகிய மூவரும் முறையே 6-4, 8-6, B-7 என்ற அறைகளில் தங்கினார்கள் நால்வரும் ஒரே தினத்தில் அறைகளை மாற்றிக் கொண்டோம். சனவரிக்கு மேல் நல்ல தென்றலை அநுபவித்தோம்; மாலை நேரத்தில் மைதானத்தில் அமர்ந்து பாடங்களைத் திருப்பிப் பார்ப்பதற்கு வசதியாக இருந்தது . நண்பர் சோமசுந்தர அய்யரும், கிருஷ்ண சாமி செட்டியாரும் திருமண மானவர்கள். இவர்கள் குடும்பத்துடன் சென்னை வந்தார்கள், சோமசுந்தர அய்யர் நுங்கம்பாக்கத்தில் வீடு அமர்த்திக் கொண்டார். அப்போது நுங்கம்பாக்கம் நிலையம் ஏற்படவில்லை. கோடம்பாக்கம்வரை இரண்டு ஃபர்லாங் தொலைவு நடந்து இரும்பூர்தியில் ஏறி சைதாப்பேட்டை வருதல் வேண்டும். கிருஷ்ணசாமி செட்டியார் தியாகராய நகரில் ஒரு சிறு வீடு அமர்த்திக் கொண்டு குடும்பத்துடன் தங்கியிருந்தார். அப்போது இப்போதுள்ள தி. நகர் நகரப் பேருந்து நிலையத்திற்கும் சைதை நகருக்கும் இடையி லுள்ள பகுதிகளில் வீடுகள் இல்லை ; அங்கும் இங்குமாக ஒரு சில சிறுசிறு வீடுகள் இருந்தன. அவற்றுள் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார் கிருஷ்ண சாமி செட்டி. யார், அக்காலத்தில் ரூ 10/- அல்லது ரூ 15/- மாத வாடகையில் சிறு வீடுகள் கிடைத்தன, கி நஷ்ண சாமி செட்டியார் குறுக்கு வழியாக நடந்தே கல்லூரிக்கு வருவார்; மாலயிைல் நடந்தே